| ஜீவ, | | குடிலா வுனக்குமிக் கெடுதியேன்? ஐயோ! அடிகாள்! இதுவென்! இதுவென் அநீதி! |
| 200. | அறியே னிச்சூ தறியேன்! அறியேன்! |
| சுந்தர, | | பொறு! பொறு! ஜீவக! அறிகுதும் விரைவில்! |
| புரு. | | வஞ்சியான் வஞ்சியான்! மன்னவ! உன்சொல் அஞ்சினேன். சூதுன் னமைச்சன் செய்கை. சுருங்கையின் தன்மை சொல்லியென் னையிங் |
| 205. | கொருங்கே யழைத்தான் உன்னகர் கவர. உன்னர சுரிமையும் உன்னகர் நாடும் என்னிட மிரந்தா னிச்சூ திதற்கா! ஓதிய சுருங்கையி னுண்மைகண் டிவன்தன் சூதுந் துரோகமுஞ் சொலியுனைத் தெருட்ட |
| 210. | எண்ணியான் வந்துழி யிவ்வொளி விளக்கும் பண்ணியல் பாட்டும் பழையபுண் ணியமுந் தூண்டிட ஈண்டுமற் றடையவும், யாண்டும் எனதுயி ரவாவிய இவ்வரு மருந்தை நனவினிற் காணவு நண்ணவும் பெற்றேன். |
| 215. | பிரிகில மினிமேல். உரியநின் னுரிமை யாதே யாயினு மாகுக. ஈதோ! மீள்குவன். விடைகொடு. நாளையும் வேட்பையேற் காண்போம் ஞாட்பிடை நாட்பே. | (2) |
| ஜீவ, | | உண்மையோ? குடிலா! உரையாய்! - |
| | (குடிலன் முகங்கவிழ்த்து நிற்க.) |
| நாரா, | | படபடத் திடுநின் பாழ்வாய் திறவாய்! |
| சுந்தர, | | விடு விடு! விசாரணைக் கிதுவன் றமையம்! நன்மையே யாவு நன்மையாய் முடியின். வாராய் ஜீவக! பாரா யுன்மகள் |
| 225. | தாராத் தன்னிரு கைதோட் சூட்டி யெண்படு மார்பிடைக் கண்படு நிலைமை. |
|
|
|