பக்கம் எண் :

மனோன்மணீயம்
170

யாவையு மிதுவே. பாவாய்! மனோன்மணி!
180.வருதி யிப்புறம். வாங்குதி மாலை.

(மனோன்மணி மணமாலைகொண்டு பலதேவனெதிர் வர.)

ஒருதனி முதல்வ னுணர்வ னுன்னுளம்.
உன்னன் புண்மையே லின்னமுங் காப்பன்.

(புருடோத்தமன் திரைவிட்டு வெளிவந்து நிற்க.)

முதற்படை,ஆற்றேன்! ஆற்றேன்! ஐய! இத் தோற்றம்.
3-ம் படை.ஊற்றிருந் தொழுகி யுள்வறந் ததுகண்.
4-ம் படை.185.அமையா நோக்கமு மிமையா நாட்டமும்,
ஏங்கிய முகமும் நீங்கிய விதழும்,
உயிரிலா நிலையு முணர்விலா நடையும்
பார்த்திடிற் சூத்திரப் பாவையே. பாவம்!

(மனோன்மணி புருடோத்தமனைக் காண ;

உடன் அவன் நிற்குமிடமே விரைவில் நடக்க)

யாவரும்..எங்கே போகிறாள்? இதுயார்? இதுயார்?
புரு, .190.இங்கோ நீயுளை! என்னுயி ரமிர்தே!

(புருடோத்தமன் தலைதாழ்க்க : மனோன்மணி

மாலைசூட்டி அவன்றோளோடு தளர்ந்து

மூர்ச்சிக்க.)

சுந்தர,.மங்கலம்! மங்கலம்! மங்கலம்! உமக்கே!
யாவரும்..சோரன்! சோரன்! சேரன்! சோரன்!
நிஷ்டாபரர்..கண்டேன்! கண்டேன்! கருணா கரரே!

(கருணாகரரைத் தழுவி)

யாவரும். .பற்றுமின்! பற்றுமின்! சுற்றுமின்! எற்றுமின்!
பலதே, .195.கொன்மின்! கொன்மின்!

(யாவரும் புருடோத்தமனைச் சூழ : சுந்தரர்கூட்டம் விலக்க.)

சுந்தர,.

நின்மின்! நின்மின்!

(அருள்வரதனும் மெய்காப்பாளரும் வர)

அருள்வரதன்..அடையி னடைவீர் யமபுரம். அகன்மின்!

(புருடோத்தமனையும் மனோன்மணியையுஞ்

சூழ்ந்து நின்று காக்க.)

யாவரும்..படையுடன் பாதகன்! (பின்னிட)
அருள், .(விலங்குடன் குடிலனைக் காட்டி.) பாதக னீங்குளான்.