பக்கம் எண் :

மனோன்மணீயம்
169

கவலை யகற்றுமின் கட்டுடன்! பனிநீர்த்
165.

திவலை சிதறுமின்! சிரிமின்! களிமின்!
இன்றுநாம் வென்றோ மென்றே யெண்ணுமின்!
இனிநாம் வெல்லற் கென்தடை? தினமணி
வருமுன் னேகுவம். அரைநா ழிகைத்தொழில்!
ஆற்றுவ மரும்போர் கூற்றுமே யஞ்ச.

170.

நாளைநல் வேளை : நம்மணி பிறந்தநாள்.
பாரீர்! பதினா றாண்டுமிந் நாளில்
ஓரோர் மங்கல விசேடம்!


சகடன்.

ஓ! ஓ!

(நாராயணன் திரும்பிவர. மனோன்மணி வாணி
முதலிய தோழியருடன் திரைப்பின்வந்து நிற்க.)


நாரா, 

இட்டநின் கட்டளைப் படியே யெய்தினர்,


ஜீவ,(நாரா
யணனை நோக்கி)
175.

மற்றிவர் கவலை மாற்றிட வொருபா
சற்றிசைத் திடுவளோ வாணி? சாற்றுதி!


வாணி. (பாட)

(கொச்சகக் கலிப்பா.)


நீர்நிலையின் முதலையின்வாய் நிலைகுலைந்த வொருகரிமுன்
ஓர்முறை யுன்பெயர் விளிக்க வுதவினைவந் தெனவுரைப்பர் ;
ஆர்துயர வளக்கர்விழு மறிவிலியா னழைப்பதற்குன்
பேர்தெரியே னாயிடினும் பிறகிடல்நின் பெருந்தகையோ.

(1)

பாராசர் துகிலுரியப் பரிதவிக்கு மொருதெரிவை
சீர்துவரை நகர்கருதிச் சிதைவொழிந்தா ளெனவுரைப்பர் ;
ஆர்துணையு மறவிருக்கு மறிவிலியா னழைப்பதற்குன்
ஊர்தெரியே னாயிடினு முறுதிதர லுனக்குரித்தே.

(2)

மறலிவர மனம்பதறு மார்க்கண்ட னுனதிலிங்கக்
குறிதழுவி யழிவில்வரங் கொண்டான்முன் னெனவுரைப்பர் ;
வெறிகழுமிப் பொறியழியும் வெம்பாவி விரவுதற்குன்
நெறியறியே னாயிடினு நேர்நிற்றல் நினதருளே.

(3)

சுந்தர,

எதுவோ விதனினு மேற்புடைப் பிரார்த்தனை?
மந்திரந் தந்திரம் வழங்கு நற்செபம்