| 135. | மணவினை முடிந்த மறுகண மணந்தோர் இருவரு மிவ்விடம் விடுத்துநம் முனிவரர் தாபதஞ் சென்று தங்குவர். இத்தகை ஆபதங் கருதியே யருட்கட லடிகள் தாமே வருந்திச் சமைத்துளா ரவ்விடம் |
| 140. | போமா றொருசிறு புரையறு சுருங்கை. அவ்வுழி யிருவரு மடைந்தபின், நம்மைக் கவ்விய கௌவையுங் கவலையும் விடுதலால், வஞ்சிய னொருவனோ, எஞ்சலி லுலகெலாஞ் சேரினு நம்முன் தீச்செறி பஞ்சே. |
| 145. | இதுவே யென்னுளம். இதுவே நமது மதிகுலம் பிழைக்கு மார்க்கமென் றடிகளும் அருளின ராஞ்ஞை. ஆயினு நுமது தெருளுறு சூழ்ச்சியுந் தெரிந்திட விருப்பே. (1) |
| | உரையீர் சகடரே யுமதபிப் பிராயம். |
சகடன். நாராயணன். (தனதுள்) | 150. | அரசர் குலமன்று. ஆயினென்? சரி சரி! மருகன் தப்பிய வருத்தம் போலும்.
|
| ஜீவ, | | குலந்தேர் வதுநற் குணந்தேர் வதுவே. பெயரா லென்னை? பேயனிவ் வஞ்சியான் பெயரா லரசன்! செயலாற் புலையன்! |
| 2-ம் படை | 155. | செய! செய! சரிசரி! தெளிந்தோம்! தெளிந்தோம்! |
| நாரா, | | மனிதரா லாவதொன் றில்லை. மன்னவா! இனியெலா மீசன திச்சை. |
| யாவரும். | | சம்மதம்! சம்மதம்! சர்வசம் மதமே! |
| ஜீவ, | | வாராய்! நாரணா! ஆனா லப்புறஞ் |
| 160. | சென்றுநம் மனோன்மணிச் செல்வியை யழைத்து மன்றல் திரைப்பின் வரச்செய். | (நாராயணன் போக.) |
| | சம்மத மெனிலிச் சடங்கினை முடிப்போம். வம்மின்! இனியிது மங்கல மணவறை. |
|
|
|