மனோன்மணீயம்
249

மானபங்கஞ் செய்ய முற்பட்டனன்;அவள் கண்ணனைப் பிரார்த்தித்து ஆடை வளரப் பெற்றதனாற் பல சேலைகள் ஒன்றன்பின் னொன்றாக வரக்கண்டு அஞ்சி விடுத்தகன்றான்.

மார்க்கண்டேயர் வரலாறு

மிருகண்டு முனிவர் புத்திரராகிய இவர் தமக்கு வயது பதினாறென்ப துணர்ந்து நாடோறுஞ் சிவார்ச்சனை செய்து அவ் வயதில் தம்மைப் பற்றும்படி யமபடர்வரத் தாம் அர்ச்சித்து வந்த சிவலிங்கப் பெருமானை இறுகத் தழுவிக்கொள்ளச் சிவபிரான் அவ் இலிங்கத்தினின்றும் புறம்போந்து எமனை உதைத்து வீழ்த்தி இவருக்குத் தீர்க்காயுள் அளித்தனர். இவர் ஏழு சிரஞ்சீவிகளுள் ஒருவர்.