மனோன்மணீயம்
248

மலைச்சிற கரிந்தமை

முற்காலத்தில் மலைகள் சிறகுகள் உடையனவா யிருந்து ஓரிடத்தினின்று மற்றோ ரிடத்திற்குக் காலா காலத்திற் பறந்து செல்வனவாய் உலகினர்க்குத் துன்பு செய்து வந்தன. இந்திரன், தேவர் மானுடர் வேண்டுகோட்கிணங்கித் தன் வச்சிராயுதத்தால் மால்வரைகளைச் சிறகரிந்தான். இதனால் இவன் கோத்திரபித்து என்னும் காரணப் பெயர் பெற்றனன். இந்திரன் கைக்குத் தப்பிய மைநாக பருவதம் ஒன்றே கடலுள் மறைந்தது.

உஷையின் தோழி சித்திரரேகை

சித்திரரேகை வாணசுரன் மந்திரி கவந்தன் புத்திரி. சித்திரமெழுதுவதில் வல்லவள். இவளே அநிருத்தன் படமெழுதி, வாணாசுரன் மகள் உஷையினிடம் காட்டி, உஷை அநிருத்தனை மஞ்சத்துடன் வருவித்து இன்ப நுகர்வித்தவள்.

யாத்திரைக்காரர் சோறு பொங்கியது

ஒன்றாய்ச் சோறு பொங்க எண்ணின சில யாத்திரைக்காரரில் ஒருவன் மற்றவர் உலையில் பெய்த அரிசியோடு தன் பங்குக்கு மணலை யிட்டு விட்டால் யாரும் அறிவதற் கிடமின்றித் தன் பங்குக்குள்ள சோறு செலவில்லாமல் கிடைக்குமென்று நினைத்து, மணலைச் சோறு அடும் பாத்திரத்தில் சொரிய, அப்படியே யாவரும் தனித்தனி எண்ணி நடத்தினார்கள் என்பது ஒரு கதை.

கஜேந்திரன் வரலாறு

இந்திரதூய்மனன் என்னும் பாண்டியன் அகத்திய முனிவரைக் கண்டு பணியாதிருந்தமையின் அவர் சினந்து யானையாகுக எனச் சபிக்க அங்ஙனமே யானையாகித் தன் இயற்கையான விஷ்ணு பக்தியோடு யானைகட்கு அரசாய் அநேக பெண்யானைகளோடு (சலக்கிரீடை) நீர் விளையாட்டுச் செய்து கொண்டிருக்கையில், சாபத்தால் முதலை வடிவேற்றிருந்த ஊகூ என்னுங் கந்தர்வன் யானையின் காலைப்பற்றி இழுக்க அநேக காலம் இரண்டும் போர் புரிந்து யானை சகிக்க முடியாது ஆதிமூலமே என்று கூவ திருமால் ஆண்டு எய்திச் சக்கரத்தால் முதலையைச் சங்கரித்துக் காத்தனர்.

துரோபதை வரலாறு

திருதராட்டிரன் புத்திரரில் ஒருவரான துச்சாதனன் பாஞ்சாலியாகிய துரோபதையின் கூந்தலைப் பிடித்திழுத்துச் சென்று துரியோதனன் சபையில் பாண்டவர்கள் முன்னிலையில் அவள் ஆடையை யுரிந்து