மனோன்மணீயம்
247

இந்திரன் முடிமேல் வளை யெறிந்தது

பாண்டி நாட்டிலும் அயல் நாடுகளிலும் மழைப்பெயல் இல்லாது போகச் சேர சோழ பாண்டியர் மூவரும் தேவலோகஞ் சென்று இந்திரனை வணங்க அவன் மற்றிருவருக்கும் மழைவர மீந்து பாண்டியனை மதியாது இகழ்ந்து அனுப்பிவிட்டான். பாண்டியன் மேகங்களைப் பிடித்துக் கட்டிச் சிறையிலிட, இந்திரன் பாண்டியனோடு போருக்கெழுந்து பொருதபோது பாண்டியன் வளையை விட்டு இந்திரன் முடியைத் தகர்த்து விட்டான். அவ்வளவில் இந்திரன் அடங்கிச் சமாதானங் கேட்க, பாண்டியன் மறுத்தான். வேளாளர் தாம் பிணையாகி மேகங்களைச் சிறைவிடுத்தார்கள்.

வடகோடு தென்கோடு சமமானது

சிவபெருமான் இமயமலையரசன் மகள் பார்வதியை இமயமலையில் மணம்புரிய விருந்தபொழுது முப்பத்து முக்கோடி தேவர்களும் நாற்பத் தெண்ணாயிரம் ரிஷிகளும் மற்றுமுள்ள தேவகணங்களும் அவ்விடத்துக்குத் திருக்கலியாணங் கண்டுகளிக்கப் போயிருந்தார்கள். அப்பொழுது, பூமியானது வடகோடு தாழ்ந்து தென்கோடுயர்ந்துவிட்டது. சிவபெருமான் வடமுனை தாழ்ந்து தென்முனை உயர்ந்திருப்பது தெரிந்து அகத்தியமுனிவரைத் தென்திசைக்கு அனுப்பு உலகைச் சமநிலை யடையச் செய்தனர் என்பது.

விந்தமடக்கிய வரலாறு

அகத்தியர், தென்னாடு நோக்கிவருகையில் தேவர்களுடைய வேண்டுகோட்படி விந்தமலையின் வீறு குன்றும்படி நிலத்தில் அழுத்தினர் என்ப. இம்மலை தென்னிந்தியாவையும் வட இந்தியாவையும் பிரிக்கும் எல்லையாகவுள்ளது. மேருமலையோடு இகலியுயர்ந்து ஆகாயம் அளாவிச் சூரிய சந்திரர் இயக்கத்தைத் தடுத்து வந்தது. இத்தடை நீக்கக் கருதியே தேவரும் வேண்டினர்.

இந்திரன் ஆயிரங்கண்ணன் ஆனது

ஒருகால் வானவர்கோனாகிய இந்திரன் கௌதம முனிவர் பத்தினியாகிய அகலிகையை இச்சித்து அவளைக் கரவிற் புணர்ந்து, அம்முனிவர் சாபத்தால் உடல்முழுதும் பெண்குறியடைப் பெற்றனன். ன்னங்கமெங்கும் பங்கமான குறிகண்ட வாசவன் தேவர் முன்னிற்க நாணினன். தேவர்கள் இந்திரன் பொருட்டுக் கவுதம முனிவரை யண்மி இந்திரன் பிழைகளைப் பொறுத்துச் சாபவிடை தருமாறு வேண்டினர். இவ்வேண்டுகோட்கிணங்கிய முனிவர் அக் குறிகள் இந்திரனொழிந்த ஏனையோர் கண்களுக்குக் கண்களாகவே விளங்குமென்று அருள் பாவித்தார். இதனால் இந்திரன் ஆயிரங்கண்ணன் என்ற பெயர் பெறுவானாயினன்.