ஓம் முகவுரை
| “மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்தவேணி | | யிறைவர்தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே | | யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும்வென் றாரியத்தோ | | டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல்செய்வாம்.” |
| “இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல்வாய்ப்ப | | இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபரப்பும் | | இருமொழியு மான்றவரே தழீஇனா ரென்றாலிவ் | | விருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ,” |
| “கண்ணுதற்பெருங் கடவுளுங் கழகமோ டமர்ந்து | | பண்ணுறத்தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமி ழேனை | | மண்ணிடைச்சில விலக்கண வரம்பிலா மொழிபோ | | வெண்ணிடைப்படக் கிடந்ததா வெண்ணவும் படுமோ.” |
என்றெடுத்த ஆன்றோர் வசனங்கள் உபசாரமல்ல, உண்மையே யென்பது பரதகாண்டம் என்னும் இந்தியா தேசத்திலுள்ள பற்பல பாஷைகளைச் சற்றேனும் ஆராய்ந்து ஒப்பிட்டு நோக்கும் யாவர்க்கும் திண்ணிதிற் றுணியத் தக்கதே. பழமையிலும் இலக்கண நுண்மையிலும் இலக்கிய விரிவிலும் ஏனைய சிறப்புக்களிலும் மற்றக் கண்டங்களிலுள்ள எப்பாஷைக்கும் தமிழ்மொழி சிறிதும் தலைகவிழ்க்கும் தன்மையதன்று. இவ்வண்ணம் எவ்விதத்திலும் பெருமைசான்ற இத்தமிழ்மொழி பற்பல காரணச்செறிவால், சில காலமாக நன்குபாராட்டிப் பயில்வார் தொகை சுருங்க, மாசடைந்து நிலைதளர்ந்து, நேற்றுதித்த தெலுங்கு முதலிய பாஷைகளுக்கும் சமமோ தாழ்வோ என்று அறியாதார் பலரும் ஐயமுறும்படி அபிவிருத்தியற்று நிற்கின்றது. இக்குறைவு நீங்கத் தங்கள் தங்களுக்கியன்றவழி முயற்சிப்பது, தங்களை மேம்படுத்தும் தமிழ்மாழியைத் தம்மொழியாக வழங்கும் தமிழர் யாவரும் தலைக்கொள்ள வேண்டிய தவறாக் கடன்பாடன்றோ! 2, மேற்கூறிய முயற்சிக்கேற்ற வழிகள் பலவுளவேனும் அவற்றுள் இரண்டு தலைமையானவை. முதலாவது முன்னோராற்
|