மனோன்மணீயம்
10

பொருட்சுவையும் சொற்சுவையும் பொலிய இயற்றப்பட்டிருக்கிற அருமையான நூல்களுள் இறந்தவை யொழிய இனியும் இறவாது மறைந்து கிடப்பனவற்றை வெளிக் கொணர்ந்து நிலை பெறச் செய்தலேயாம். இவ்வழியில் தற்காலம் உழைத்து வரும் பெரும்புகழ் படைத்த ம-ஸ்ரீ தாமோதரம் பிள்ளை யவர்கள், பிரமஸ்ரீ சாமிநாதய்யர் அவர்கள் முதலிய வித்வசிரோமணிகளுடைய நன்முயற்சிக்கு ஈடு கூறுத்தக்கது யாது? தம்மக்கட்கு எய்ப்பில் வைப்பாக இலக்கற்ற திரவியங்களைப் பூர்வீகர்கள் வருந்திச் சம்பாதித்து வைத்திருக்க, அம்மக்கள் அவை யிருக்குமிடந் தேடி எடுத்தநுபவியாது இரந்துண்ணும் ஏழைமைபோ லன்றோ ஆகும், ஈடுமெடுப்புமற்ற நுண்ணிய மதியும் புண்ணிய சரிதமுமுடைய நம் முன்னோர் ஆயிரக்கணக்கான ஆண்டு உழைத்து ஏற்படுத்தி யிருக்கும் அரிய பெரிய நூல்களை நாம் ஆராய்ந்து அறிந்து அநுபவியாது வாளா நொந்து காலம் போக்கல்! ஆதலால் முற்கூறிய உத்தம வித்துவான்களைப் பின்றொடர்ந்து நம் முன்னோர் ஈட்டிய பொக்கிஷங்களைச் சோதனைசெய்து தமிழராகப் பிறந்த யார்க்கும் உரிய பூர்வார்ஜித கல்விப் பொருளை க்ஷேமப்படுத்தி யநுபவிக்க முயல்வது முக்கியமான முதற்கடமையாம்.

3, பூர்வார்ஜித தனம் எவ்வளவு பெரிதாக இருப்பினும் அதனைப் பாதுகாப்பதோடு ஒவ்வொருவரும் தத்தமக்கியன்ற அளவு உழைத்துச் சொற்பமாயினும் புதுவரும்படியைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்பது பொதுவான உலக நோக்கமாக இருப்பதால், முற்கூறிய முயற்சியோடு இரண்டாவதொரு கடன்பாடும் தமிழர் யாவருக்கும் விட்டுவிலகத் தகாததாகவே ஏற்படும். பூர்வார்ஜிதச் சிறப்பெல்லாம் பூர்வீகர்கள் சிறப்பு; அந்த அந்தத் தலைமுறையார்களுக்கு அவரவர்கள் தாமே ஈட்டிய பொருளளவும் சிறப்பே யொழிய வேறில்லை. அத்தலைமுறையாரைப் பின்சந்ததியார் பேணுவதற்கும் அதுவே யொழிய வேறு குறியுமில்லை. ஆனதினால் எக்காலத்திலும் எவ்விஷயத்திலும் பூர்வீகர்களால் தங்களுக்குச் சித்தித்திருப்பவற்றை ஒவ்வொரு தலைமுறையாரும் பாதுகாப்பதுமன்றித் தங்களாற் கூடிய அளவும் அபிவிருத்தி பண்ணவும் கடமைபூண்டவர்க ளாகின்றார்கள். ‘பூர்வார்ஜிதம் மிகவும் பெரிதாயிருக்கிறன்றதே! நம் முயற்சியால் எத்தனைதான் சம்பாதிப்பிலும் நமது பூர்வார்ஜிதத்தின்முன் அது