மனோன்மணீயம்
11

ஒரு பொருளாகத் தோற்றுமா’ என மனந்தளர்ந்து கைசோர்வார்க்கு அவர் பூர்வார்ஜிதப் பெருமையே கேடு விளைவிப்பதாக வன்றோ முடியும்? அந்தோ! இக்கேட்டிற்கோ நம் முன்னோர் நமக்காக வருந்தி யுழைத்துப் பொருளீட்டி வைக்கின்றார்கள!் பிதிர்களாய் நிற்கும் அம் முன்னோர் இவ்விபரீத விளைவைக் கண்டால் நம்மை எங்ஙனம் வாழ்த்துவர்? இக்கூறிய உண்மை செல்வப் பொருளுக்கன்றி கல்விப் பொருளுக்கும் ஒரு குடும்பத்துள் வந்த ஒருவனுக்கன்றி ஒரு தேசத்திற் பிறந்த ஒவ்வொரு தலைமுறையாருக்கும் ஒன்றுபோலவே பொருத்தமுடைய தாதலால்,

“குடிசெய்வ லென்னு மொருவற்குத் தெய்வ
மடிதற்றுத் தான்முந் துறும்.”

என்னும் திருக்குறளை நம்பி நம்முன்னோர் யாதேனும் ஒரு வழியில் அபரிமிதமான சிறப்படைந்தா ராயின் நாமும் அவர் போலவே இயன்ற அளவும் முயன்று பெருமைபெறக் கருதுவதன்றோ அம்முன்னோர்க்குரிய மக்கள் நாமென முன்னிற்றற்கேற்ற முறைமை!

“தீங்கரும் பீன்ற திரள்கா லுளையலரி
தேங்கமழ் நாற்ற மிழந்தாஅங் - கோங்கு
முயர்குடி யுட்பிறப்பி னென்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை யில்லாக் கடை.”

ஆதலால் அருமையாகிய பூருவ நூல்களைப் பாதுகாத்துப்பயின்று வருதலாகிய முதற்கடமையோடு அவ் வழியே முயன்று அந்த அந்தக் காலநிலைக் கேற்றவாறே புது நூல்களை இயற்ற முயலுதல் தமிழ்நாடென்னும் உயர்குடியிற் பிறக்கும் ஒவ்வொரு தலைமுறை யாருக்கும் உரித்தான இரண்டாம் கடமையாய் ஏற்படுகின்றது.

4. மேற்கூறிய இரண்டாம் கடமையைச் சிரமேற்கொண்டு தமிழோர் என்னும் பெரிய குடும்பத்துள்ளே தற்காலத்துள்ள தலைமுறையாருட் கல்வி கேள்வி அறிவு முதலிய யாவற்றுள்ளும் கனிஷ்டனாகிய சிறியேன்,

“இசையா தெனினு மியற்றியோ ராற்றா
லசையாது நிற்பதா மாண்மை.”

என்னும் முதுமொழியைக் கடைப்பிடித்து நவீனமான பல வழிகளுள்ளும் என் சிறு மதிக்கேற்றதோர் சிறுவழியிற் சில