மனோன்மணீயம்
14

புருடோத்தமவர்மனைப் பூருவகரும பரிபாகத்தால் மனோன்மணிகனாக்கண்டு மோஹம் கொள்ள அவட்குக் காமசுரம் நிகழ்ந்தது. அச்சுரம் இன்னதன்மையதென்றுணராது வருந்தும் ஜீவகனுக்குத் தெய்வகதியாய்த் தம் அறைக்கு மறுநாட்காலமே வந்த முனிவர் மனோன்மணி நிலைமை காமசுரமே எனக் குறிப்பாலுணர்ந்து அவள் நோய் நீங்கு மருந்து மணவினையே எனவும் அதற்கு எவ்விதத்திலும பொருத்தமுடையோன் சேரதேசத்துப் புருடோத்தமனே யெனவும் அவ்வரசனது கருத்தினை நன்குணர்ந்து அம்மணவினை எளிதில் முடிக்க வல்லோன் நடராஜனே யெனவும் உபதேசித்தகன்றார். வாணியினது காதலனாகிய நடராஜன் மேல் அவள்பிதா ஆரோபித்திருந்த அபராதங்களால் வெறுப்புக்கொண்டிருந்த பாண்டியன் அக் குருமொழியை உட்கொள்ளாதவனாய்க் குடிலனுடைய துன்மந்திரத்தை விரும்பினான். குடிலனோ, தன்னயமே கருதுவோனாதலால், சேரதேசத் தரசன் மருமகனாக வருங்காலத்தில் தன் சுவாதந்தரியத்திற்கு எங்ஙனம் கெடுதி வருமோ என்ற அச்சத்தாலும் ஒருகால் தன்மகனாகிய பல தேவனுக்கே மனோன்மணீயும் அவட்குரிய அரசாட்சியும் சித்திக்கலாகாதா என்ற பேராசையாலும் முனிவர் கூறிய மணத்தைத் தடுப்பதற்குத் துணிந்து, தொடக்கத்திற் பெண்வீட்டார் மணம் பேசிப்போதல் இழிவென்னும் வழக்கத்தைப் பாராட்டிப் புருடோத்தமன் மனக்கோள் அறிந்தே அதற்கு யத்தனிக்க வேண்டுமென்றும், அப்படி யறிதற்குப் பழைய சில விவாதங்களை மேற்கொண்டு ஒரு தூது அனுப்பவேண்டு மென்றும் அப்போது கலியாணத்திற்குரிய சங்கதிகளையும் விசாரித்துவிடலா மென்றும் ஒரு சூது கூற அதனை யரசன் நம்பி, குடிலன்மகன் பல தேவனையே இவ்விஷயத்திற்குத் தூதனாக அனுப்பினான்.

8. சேரதேசத்திலே புருடோத்தமன் தனக்குச் சிலநாளாக நிகழ்ந்துவரும் கனாக்களில் மனோன்மணியைக் கண்டு காமுற்று அவள் இன்னாளென வெளிப்படாமையால் மனம் புழுங்கி யாருடனேனும் போர்நேர்ந்தால் அவ்வாரவாரத்திலாயினும் தன் மனதைக் கொள்ளை கொள்ளும் கனாவொழியாதா வென்ற நோக்கமுடனிருக்கும் சந்தியாக இருந்தது. அதனாற் பலதேவன் சென்று தன் பிதா தனக்கு இரகசியமாகக் கற்பித்தனுப்பியபடி சேரன் சபையில் அகௌரவமான துர்வாதம் சொல்லவே புரு