17. பல்வேறு தொழில்களிடையிலும் பிணி கவலை யாதிகள் நடுவிலும் ஆங்காங்கு அகப்பட்ட அவகாசங்களிற் செய்யப்பட்டமையால் இந்நாடகத்துட் பல பாகங்கள் என் சிற்றறிவிற்கே திருப்தி தருவன அல்ல. ஆயினும் கல்வி கேள்விகளிற் சிறந்த கனவான்கள் இக்கூறிய குறைவுகளைப் பாராட்டாது என்னை யிம் முயற்சிக்குத் தூண்டிவிட்ட நன்னோக்கத்தையே கருதி இந்நவீன நாடகத்தை அநாதரவு செய்யாது கடைக்கணித்து அருள் புரியப் பலமுறை பிரார்த்திக்கின்றேன்.
‘’பொறியின்மை யார்க்கும் பழியன் றறிவறிந் தாள்வினை யின்மை பழி’’ |
குரு சுந்தர சரணாலயம்.
|