1 நாற்படை வருணனையும், நாட்டபிமான விளக்கமும், வீரரசமும். 2 தருமயுத்தத்தின் நீதியும், படைக்குள் குழப்பம் பிறக்க அரசனுக் கபாயம் நேர்ந்தவழி நாராயணன் காக்கச் சென்ற கதையும். 3 ஜீவகன் சோகமும், குடிலனுடைய தந்திர நடபடியும், பலதேவனுடைய கீழ்ப்படியாத் துர்க்குணமும். 4 குடிலன் நாராயணன்மேல் பொய்க்குற்றம் காட்டி நிலை நிறுத்திய தந்திரமும் ராஜபக்தியின் இயல்பும். 5 அரசர் கடமையும் ஆண்மையும், ஜீவகனது ஏழைமையும், குடிலனுடைய சமயோசித சாமர்த்தியமும்.
|