| 45. | குற்றங் காணக் குறுகுதல் முற்றும். |
| | மணற்சோற் றிற்கற் றேடுதல் மானும். |
| | (சகடர் வர) |
| ஜீவ. (சகடரை | | சுகமோ யாவரும்? முதிய சகடரே ! |
| நோக்கி) | | மகிழ்வுற வும்மை நோக்கி வெகுநாள் |
| | ஆயின தன்றே? |
| | |
| சகடர், | | ஆம் ! ஆம் ! அடியேன். |
| | |
| ஜீவ. | 50. | மேயின விசேடமென்? விளம்புதிர். என்குறை? |
| | |
| சகட, | | அறத்தா றகலா தகலிடங் காத்துப் |
| | பொறுத்ததோட் புரவல ! உன்குடை நீழற் |
| | பொருந்து மெங்கட் கரந்தையு முளதோ? |
| | சுகமிது காறும். அகமகிழ் வுற்றுன் |
| 55. | மந்திரத் தலைவன் குடிலன் மகற்கே |
| | எந்தன் புதல்வி வாணியை வதுவையிற் |
| | கொடுக்கவோ ராசை கொற்றவ ! மற்றது |
| | முடிக்கநின் கருணையே முற்றும்வேண் டுவனே. |
| | |
| ஜீவ. | | சீலஞ் சிந்தை கோல மனைத்துஞ் |
| 60. | சாலவும் பொருந்தும், சகடரே ! அதனால் |
| | களித்தோம் மெத்த, ஏ ! ஏ ! குடில ! |
| | ஒளித்த தென்நீ யுரையா தெமக்கே? |
| | |
| குடில, | | ஆவதாயி னறிவியா தொழிவனோ? |
| | |
| ஜீவ. | | இடையூ றென்கொல்? இடியே றன்ன |
| 65. | படையடு பலதே வன்றா னேதோ |
| | விரும்பினன் போலும் வேறோர் கரும்பே ! |
| | |
| குடில, | | இல்லையெம் மிறைவ ! எங்ஙன முரைக்கேன் ! |
| | சொல்லிற் பழிப்பாம். சகடரே சொல்லுக. |
| | |
| ஜீவ. | | என்னை? சகடரே ! இடையூ றென்னை? |