பக்கம் எண் :

மனோன்மணீயம்
17

சகட,70.பரம்பரை யாயுன் றொழும்புபூண் டொழுகும்
அடியேன் சொல்பழு தாயின தில்லை.
முடிவிலாப் பரிவுடன் வளர்த்தவென் மொய்குழல்
ஒருத்தியே யென்சொல் வியர்த்தமாக்குவள்.
ஒருதலை யாயிம் மணத்திற் குடன்படாள்.
75.விரிதலைப் பேய்போல், வேண்டிய விளம்பியும்,
ஓரா ளொன்றும் : உணராள் தன்னயம் :
நேரா ளொருவழி : பாராள் நெறிமுறை :
என்னயான் செய்கேன்? இதன்மே லெனக்கும்
இன்னல் தருவதொன் றில்லை. தாதையர்
80.மாற்றங் கேளா மக்கள் கூற்றுவர்
எனுமொழி யெனக்கே யனுபவ மிறைவ !
உரைத்தவென் கட்டுரை பிழைத்திடப் பின்னுயிர்
தரித்திருந் தென்பயன்? சாவோ சமீபம்.
நரைத்த தென்சிரம் : திரைத்த தென்னுடல் :
85.தள்ளருங் காலம் : பிள்ளையும் வேறிலை.
என்னுரை காத்துநீ யிம்மண முடிக்க
மன்னவ ! கிருபையேல் வாழ்து மிவ்வயின்,
இல்லையேல் முதியவென் னில்லா ளுடனினி

(கண்ணீ்ா துளிக்க)

செல்ல விடையளி ! செல்லுதுங் காசி.
ஜீவ.90.எனிது சகடரே ! என்கா ரியமிது !
தேன்மொழி வாணி செவ்விய குணத்தாள்.
காணி லுரைப்பாம். வீணிவ் வழுகை.
நாரா, (தனதுள்)பாதகன் கிழவன் பணத்திற் காக
ஏதுஞ் செய்வன். இறைவனோ அறியான்.
95.ஓதுவங் குறிப்பாய். உணரி லுணர்க.

நேரிசை வெண்பா


(அரசனைமாற்றலர்தம் மங்கையர்க்கு மங்கலநா ணங்கவிழ
நோக்கி.ஏற்றியநாண் விற்பூட்டு மேந்தலே - சோற்றதற்காய்த்