| ஜீவ. | | தனிமொழி யென்னை? |
| | |
| நாரா, | | சற்றும் பிசகிலை. |
| | நீட்டல் விகாரமாய் நினையினு மமையும். |
| | |
| ஜீவ. | | காட்டுவ தெல்லாம் விகாரமே, காணாய் |
| | கிழவரி னழுகை. |
| | |
| நாரா, | | சிலவரு டந்தான். |
| 100. | நெடுநாள் நிற்குமிளையவ ரழுகை. |
| | |
| ஜீவ. | | விடு,விடு. நின்மொழி யெல்லாம் விகடம். |
| | (நாராயணன் போக.) |
| | |
| (சகடரை நோக்கி) | | அறிவிர்கொல் லவளுளம்? |
| | |
| சகட, | | சிறிதியா னறிவன். |
| | திருநட ராஜனென் றொருவனிங் குள்ளான். |
| | பொருவரும் புருடன்மற் றவனே யென்றவள் |
| 105. | சொல்வது கேட்டுளர் சிற்சில தோழியர். |
| | |
| குடில, (அரசனை | | நல்ல தப்படியே நடக்கிலென்? இவர்க்கும் |
| நோக்கி) | | பொல்லா முரண்டேன்? |
| | |
| சகட, (குடிலனை | | போம் ! போம் ! உமது |
| நோக்கி) | | குழந்தையே லிங்ஙனங் கூறீர் ! முற்றும், |
| | இழந்திட வோவெனக் கித்தனை பாடு? |
| 110. | பூவையை வளர்த்துப் பூனைக் கீயவோ? |
| | |
| (அரசனை நோக்கி) | | காவலா ! அவனைப் போலயான் கண்டிலன் |
| | சுத்தமே பித்தன். சொல்லுக் கடங்கான். |
| | தனியே யுரைப்பன். தனியே சிரிப்பன். |
| | எங்கெனு மொருபூ இலைகனி யகப்படில் |
| 115. | அங்கங் கதனையே நோக்கி நோக்கித் |
| | தங்கா மகிழ்ச்சியிற் றலைதடு மாறுவன். |