| | பாற்கலு மவனுக் ககப்படாத் திரவியம் |
| | ஆயிரந் தடவை யாயினு நோக்குவன். |
| | பேயனுக் களிக்கவோ பெற்றனம் பெண்ணை? |
| | |
| ஜீவ. | 120. | ஆமாம் ! யாமுங் கண்டுளேஞ் சிலகால் |
| | நின்றா னின்ற படியே, அன்றி |
| | யிருக்கினு மிருப்ப னெண்ணிலாக் காலம். |
| | சிரிக்கினும் விழிக்கினு நலமிலை தீயதே. |
| | அவனன் றோமுன் னஞ்சைக் களத்தில் - |
| | |
| குடில, | 125. | அவன்றான் ! அவன்றான் ! அழகன் ! ஆனந்தன். |
| | |
| ஜீவ. | | அழகிருந் தென்பயன்? தொழிலெலா மழிவே. |
| | எங்கவ னிப்போது? |
| | |
| குடில, | | இங்குள னென்றனர். |
| | சிதம்பரத் தனுப்பினேன் : சென்றிலன், நின்றான். |
| | இதந்தரு நின்கட்ட ளையெப் படியோ? |
| | |
| ஜீவ. | 130. | மெத்தவும் நன்மை. அப்படி யேசெய். |
| | |
| குடில, | | சித்தம். ஆயினுஞ் செல்கிலன். முனிவர் |
| | பிரியனா தலினாற் பெயர்ந்திலன் போலும். |
| | |
| ஜீவ. | | சரியல. இராச்சிய தந்திரத் தவர்க்கென்? |
| (சகடரை நோக்கி) | | நல்லது சகடரே ! சொல்லிய படியே |
| 135. | மொழிகுவம் வாணிபால். மொய்குழற் சிறுமி |
| | யழகினில் மயங்கினள். அதற்கென்? நும்மனப் |
| | படியிது நடத்துவம். விடுமினித் துயரம். |
| | |
| சகட, | | இவ்வுரை யொன்றுமே யென்னுயிர்க் குறுதி. |
| | திவ்விய திருவடி வாழுக சிறந்தே ! |
| | (சகடர் போக, செவிலி வர.) |
| | |
| ஜீவ. (செவிலியின் | 140. | என்னை யிவண்முக மிப்படி யிருப்பது? |
| முக நோக்கி) | | தோற்றம் நன் றன்றே ! |
| செவிலி, | | நேற்றிரா முதலா - |