பக்கம் எண் :

மனோன்மணீயம்
20

ஜீவ. பிணியோ வென்கண் மணிக்கு?
செவிலி,.                பிணியா
யாதுமொன் றில்லை. ஏதோ சிறுசுரம்.
ஜீவ. சுரம் ! சுரம் ! ஓ ! சொல்லுதி யாவும்
145.அரந்தையொன் றறியாள் ! ஐயோ ! விளைந்தவை
உரையாய் விரைவில். ஒளிக்கலை யொன்றும் !
வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
செவிலி,அறியேம் யாங்கள், ஐய ! அம் மாயம்
நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
150.நம்மனை புகுந்த செல்வி, எம்முடன்
மாலையி லீலைச் சோலை யுலாவி
அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு
நயவரை பலவுங் குயிலின் மிழற்றி
மலைய மாருதம் வந்துவந் துந்த
155.நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
துணைபுண ரன்னத் தூவி யணைமிசைக்
கண்படு மெல்லை - கனவோ நினைவோ -
‘நண்ப ! வென்னுயிர் நாத’ வென் றேங்கிப்
160.புண்படு மவள்போற் புலம்புறல் கேட்டுத்
துண்ணென யாந்துயி லகற்றப் புக்குழி,
குழலுஞ் சரியும், கழலும் வளையும் ;
மாலையுங் கரியும், நாலியும் பொரியும் ;
விழியும் பிறழும், மொழியும் குழறும் ;
165.கட்டழ லெரியும், நெட்டுயிர்ப் பெறியும் ;
நயனநீர் மல்கும், சயனமே லொல்கும் ;
இவ்வழி யவ்வயிற் கண்டுகை நெரியா,
தெய்வம் நொந்தேம், செய்கட னேர்ந்தேம் ;
அயினிநீர் சுழற்றி யணிந்தேம் பூதி ;
170.மயிலினை மற்றோ ரமளியிற் சேர்த்துப்
பனிநீர் சொரிந்து நனிநேர் சாந்தம்
பூசினோம் ; சாமரை வீசினேம் ; அவையெலாம்,