| | எரிமே லிட்ட இழுதா யவட்கு |
| | வரவர மம்மர் வளர்க்கக் கண்டு |
| 175. | நொந்தியா மிருக்க, வந்தன வாயசம் |
| | கா கா இவளைக் கா’வெனக் கரைந்து ; |
| | சேவலுந் திகைத்துத் திசைதிசை கூவின ; |
| | கங்குல் விடிந்தும் அங்கவள் துயரம் |
| | சற்றுஞ் சாந்த முற்றில ததனால் |
| 180. | அரச ! நீ யறியிலெஞ் சிரசிரா வென்றே |
| | வெருவி யாங்கள் விளைவ துரைக்கும் |
| | நிமித்திகர்க் கூஉய்க் கேட்டோம் நிமித்தம் |
| | பெண்ணை யந்தார் சூடிட நுந்தம் |
| | பெண்ணை யந்தார் சூட்டெனப் பேசினர் ; |
| 185. | எண்ணம் மற்றவர்க் கியாதோ வறியேம் ; |
| | பனம்பூச் சூடியு முனம்போ லவேசுரம். |
| | ஏது மறியாப் பேதை ! நேற்றுத் |
| | தவஞ்செய வாசை யென்றவள் தனக்குக் |
| | காதனேய் காணவோ ரேதுவு மில்லை. |
| 190. | எம்தா யிருக்கு நிலைமை யினிநீ |
| | வந்தே காண்குதி மன்னவ ரேறே ! |
| | |
| ஜீவ. | | ஆ ! ஆ ! நோவிது காறுமொன் றறிகிலள். |
| | இதுவென் புதுமை? என்செய் கோயான்? |
| | |
| குடில, | | தவஞ்செய வாசை யென்றுதாய் நவின்ற |
| 195. | வாக்கு நோக்கின் முனிவர் மந்திரச் |
| | செய்கையோ வென்றோ ரையம் ஜனிக்கும் ; |
| | நேற்றங் கவட்கவர் சாற்றிய மாற்றம் |
| | அறியலாந் தகைத்தோ? |
| | |
| ஜீவ. | | வறிதவ் ஐயம். |
| | மொழியொரு சிறிது மொழிந்திலர். கண்டுழி |
| 200. | அழுதனர். அழுதா ளுடனம் மமுதும். |
| | ஆசி பேசியங் ககலுங் காலை |
| | ஏதோ யந்திர மெழுதிவைத் திடவோர் |
| | அறையுட னங்கணந் திறவுகோ லோடு |