பக்கம் எண் :

மனோன்மணீயம்
22

தமக்கென வேண்டினர். அளித்தன முடனே.
205.நமக்கதி னாலென்? நாமறி யாததோ?
என்னோ அறியேன் இந்நோய் விளைவு?

(ஜீவகனும் செவிலியும் போக.)

குடில, (தனதுள்)யந்திரத் தாபன மோவவ ரெண்ணினர்?
அவ்வள வறிவி லாரோ முனிவர்?
அவ்வள வேதான். அன்றியென்? ஆயினும்,
210.எத்தனை பித்தனிவ் வரசன் ! பேதையின்
இத்திறங் காம மென்பதிங் கறியான்.
உரைக்குமுன் கருதுவம் நமக்குறு நலமே,

(குடிலன் போக.)


முதல் அங்கம் : 3-ம் களம்

முற்றிற்று