பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்119

வி. அதையாவது செய்கிறதற் கென்ன மாமி? இந்தத்
திரையைச் சிறிது கிழித்து, கையை வெளியில் விடுகிறது
தானே?

பு. ஆம் !  இதொ என்வாளால் வழி செய்கிறேன். 
                 [கிழித்த திரையின் வழியே பத்மா
                    வதி தன் கரத்தை நீட்ட அதற்கு
                    முத்தமிடுகிறார். ] 

இவ்வளவாவது கொடுத்துவைத்தேனே !  இனி நான்
இறந்தாலும் பெரிதல்ல ! 

ப. [ கையைச் சரேலென்று இழுத்துக்கொண்டு ]  மஹாராஜா,
இதென்ன !  தாம் கண்ணீர் விடுகிறீரே !  மனோஹர
னுடைய தந்தையா யிருந்தும் தாம் யுத்தத்திற்குச்
செல்ல வியசனப்படுவதா? இதென்ன கண்ணீர்?

பு. கண்ணே !  பத்மாவதி, நானதற்காக வருத்தப்படவில்லை,
யுத்தத்தில் ஒரு வேளை இறக்க வேண்டுமேயென எனக்குச்
சிறிதும் அச்ச மில்லை. நான் வருந்திய தெல்லாம்
இவ்வள வழகிய கரத்தையுடைய பெண்மணியை மணந்து,
அவளுக்குத் துரோகம் செய்து, இக்கரத்தைப் பற்றி அக்கினி
சாக்ஷியாய் மணந்தபொழுது நான்செய்த பிரதிக்ஞைகளை
யெல்லாம் தவறினேனே யென்று வருந்திக் கண்ணீர்
விட்டேனே யொழிய வேறொன்றுமில்லை, 
                    [வெளியில்பேரிகை முழங்குகிறது. ] 

ஜெயபேரிகை முழங்குகிறது !  ஏதோ நற்சகுனமாகத்
தானிருக்கிறது ! -பத்மாவதி. நான் விடை பெற்றுச்
செல்கிறேன்.-விஜயா, நான் வருகிறேன். 
                             [விரைந்து போகிறார். ] 


                 காட்சி முடிகிறது.