ஐந்தாம்
அங்கம்
முதற் காட்சி.
இடம்-காவிரிக் கரையிலோர் வசந்த மண்டபம். காலம் - பகல்.
இடையில் திரையிட்டிருக்க, ஒரு பக்கத்தில் புருஷோத்தமராஜனும்
மற்றொரு பக்கம் பத்மாவதியும் விஜயாளும் இருக்கின்றனர்.
|
ப.
|
மஹாராஜா,
தாம் ஒன்றும் அதைரியப்படவேண்டாம்.
உடனே புறப்பட்டுப்போய், பகைவரை வென்று வெற்றி
மாலை புனைந்து வருவீராக !
|
பு.
|
கண்ணே,
பத்மாவதி, பதிவிரதையாகிய உனக்கு நான்
செய்த குற்றங்களை யெல்லாம் மன்னித்து இப்பொழுதாவது
உனது வதனத்தை ஒரு முறை நோக்கிவிட்டுச் செல்ல
விடையளிக்கலாகாதா?
|
ப.
|
மஹாராஜா,
தாம் எப்படியும் வெற்றி பெறுவீர் என்று
எனக்கேதோ தோன்றுகிறது. தாம் ஒன்றிற்கும் வருந்
தவேண்டாம். ஆயினும் நான்செய்த பிரதிக்ஞையினின்றும்
தவறுவது நியாயமன்று மன்னிக்கவேண்டுமென்னை.
|
பு.
|
ஆனால் என்னை எப்பொழுதும் கண்ணெடுத்துப்
பார்க்
கமாட்டாயோ?
|
ப.
|
அப்படியன்று, எப்பொழுது மனோஹரனை உயிருடன்
என் கண்முன்பாகப் பார்க்கிறேனோ, அந்த க்ஷணமே
உமது வேண்டுகோளுக் கிசைவேன். அதுவரையில் தாம்
என்னை நிர்ப்பந்திப்பது நியாய மன்று.
|
பு.
|
மனோஹரா, மனோஹரா ! -பத்மாவதி, உன்னிஷ்டம் ;
ஆயினும் உனது கரத்தையாவது சற்றுக் கொடு.
அதையாவது முத்த மிட்டுச் செல்கிறேன், உன்னைப்
பார்த்துவிட்டுச் செல்லக்கொடுத்துவைக்காமற் போன போதிலும் !
|