|
கொல்ல
விடுவேனென்று பார்த்தாயோ ! என்னை
யாரென்று நினைத்தாய்? வசந்தசேனை ! -நீ என்னைக்
கொல்வதென்ன ! நானே என்னைக் கொன்று கொண்டு
மாள்கிறேன் ! போ ! [தன்னையும் குத்திக்கொண்டு மகன்
மீது
விழுந்து சாகிறாள். ]
|
அ.
|
விகடரே, நீர் முன்பு அழுத சகுனத்திற்குச் சரியாக
முடிந்ததே ! நாமிப்பொழு தென்னசெய்வது?
புருஷோத்தமராஜன், பந்தங்களுடன் சேவகர் புடைசூழ வருகிறார்.
|
பு.
|
இதென்ன
இங்கு கூச்சல் ! - வசந்தசேனை ! வசந்தன் !
இதென்ன இது?
|
விக.
|
மஹாராஜா, வசந்தர் உமது உடை முதலியவற்றை
எல்லாம் அணிந்துகொண்டு இப்படி வர, சின்ன ராணி
எதிர்பக்கமாக வந்து மஹாராஜா எங்கே என்று கேட்
டார்கள் ; நான் வேடிக்கையாக 'இதோ வருகிறார்
மஹாராஜா, என்றேன். உடனே கோபத்துடன் வசந்
தர்மீது பாய்ந்து குத்திக் கொன்று விட்டார்கள் !
|
பு.
|
ஆம் ! உங்கள்மீது குற்றமில்லை ! சரி,
என்னைக் கொல்ல
வந்தவள் தெய்வாதீனத்தால் வசந்தனையே கொன்று
விட்டனள் ! - வசந்தசேனை ! உன்கெடுமதிக்குத் தக்க தண்
டனையே உனக்குத் தெய்வகடாக்ஷத்தால் விதிக்கப்பட்டது.
ஹா ! -வசந்தசேனை ! சற்று முன்பாக எவ்வளவோ
யுக்திகளெல்லாம்செய்த உனது மூளை ஓய்வுற்று அடங்கி
யிருக்கிறதோ?- ஆயினும்- எனது மனைவியைப்போல்
சிலகாலம் வாழ்ந்திருந்தாய், இறந்த பின்னும் தக்க மரி
யாதையுடன் செல்வாய்-நீ செல்ல வேண்டிய இடத்திற்கு !
-உலகவாழ்வு இதுதான் ! [வெளியில் யுத்த பேரிகை
முழங்குகிறது. ]
என்ன இந்த சமயத்தில் யுத்தபேரிகை முழங்குகிறது !
என்ன சமாசாரம்?
[விரைந்து போகிறார். ]
காட்சி
முடிகிறது.
|