பக்கம் எண் :

116மனோஹரன்[அங்கம்-4

நாளாக எனக்குத் தூக்கமே யில்லை. பட்டணமெல்லாம்
இளவரசரைக் காணோமென்று குழப்பமாகி எல்
லோரும் நம்மைக் கேட்க ஆரம்பித்து விடுகிறார்கள்
அவர் எங்கே யென்று. அப்பா !  சற்று இந்த இருட்டி
லாவது நித்திரை செய்வோம். 
                 [படுத்துக்கொள்ளப் பார்க்கிறான்.] 

வன். [ உள்ளே யிருந்து ]  ஆம் !  சந்தேகமில்லை, நான் தான் மஹாராஜா ! 

விக.  ஐஐயோ !  இந்தப் பயித்தியம் இங்கே இருக்கிறதையா ; 
அதோ தூரத்தில்வருகிறதே ! - அடடா! மஹாராஜாவின்
ஆடையா பரணங்களை யெல்லாம் அப்படியே மாட்டிக்
கொண்டிருக்கிறதே!  தூரத்தில் வித்தியாசமுந் தெரிய வில்லையே
 ! -இது யார் இந்தப் பக்கம்?

           வசந்தசேனை விரைந்து வருகிறாள்.

வனை. விகடா ! 

விக. அம்மணி ! 

வனை. மஹாராஜா எங்கே யிருக்கிறார்?

விக. இதோ வருகிறாரே, சாக்ஷாத் மஹாராஜா ! 
எதிர்புறமாக சிரித்தவண்ணம் வசந்தன் வருகிறான்.

வனை. [ அவன் மீது பாய்ந்து ]  புருஷோத்தம ராஜனே !
                          [கட்கத்தை ஓங்கி ]
இனி பத்மாவதியுடன் சுகமாய் வாழும் !
                      [குத்திக் கொல்கிறாள். வசந்தன்
                         வீழ்ந் திறக்கிறான். ]  

விக. அம்மணி !  அம்மணி !  என்ன வசந்தரைக் கொன்று
விட்டீரே !  

               அமிர்தகேசரி வருகிறான்.

அ. ஐ ஐயோ !  வசந்தர் இறந்து விட்டாரே ! 

வனை. ஆம், ஆம் !  வசந்தன் தான் !  சந்தேகமில்லை !  கேசரிவர்மன்
சொன்னது நிறைவேறிவிட்டது !  இனி நானிருப்ப
பானேன்?-பொறு, மனோஹரா ! ஆ !  நீ என்னைக்