மூன்றாவது
காட்சி.
இடம்- மஹாராஜாவின் சபை. காலம்-காலை.
இடையில் ஓர் திரை யிடப்பட்ட சேர தேசத்துச் சிங்காதனத்தின்மீது
ஒரு புறம் புருஷோத்தமராஜனும் மற்றொருபுறம்
பத்மாவதியும் வீற்றிருக்கின்றனர்.
விஜயாள் பத்மாவதியின் அருகில் தாதியர் புடைசூழ நிற்கிறாள்.
குரு, ரணவீரகேது, மந்திரிபிரதானிகள் சபையில் உட்கார்ந்திருக்கின்றனர்.
மனோஹரன், சத்தியசீலர், ராஜப்பிரியன், பௌத்தாயனன், நால்வரும்
முழுக்கவச மணிந்து முகத்தை மூடி, மந்திரி பிரதானிகள்
புடைசூழ வருகின்றனர்.
சபையோர்களெல்லாம் ஜெய கோஷம் செய்கின்றனர்.
|