|
சிம்மாசனத்தின்மீது
வீற்றிருக்கிறோம். இனி தாம்
தடையின்றி கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
|
ம.சிங
|
[ சிங்காதனத்
தெதிரிற் போய் முழந்தாளிட்டுப் பணிகிறான். ]
|
பு.
|
வீரகேசரி !
இதென்ன? என் முன்பாக முழந்தா ளிடுகிறீரே?
|
ம.
|
மஹாராஜா !
நான் இவ்வுலகில் எதை முக்கியமாகப்
பெறவிரும்பினேனோ அதைப் பெற்றேன், இனி எனக்கு
வேறொன்றும் வேண்டியதில்லை ! -அம்மணி !
[ முகத்தின் மூடியை எடுத்து ]
நான் அன்றுசெய்தசபதத்தை நிறைவேற்றினேனன்றோ?
|
ப.
|
[எழுந்
தோடி மனோஹரனைக் கட்டியணைத்து ] கண்ணே ! நிறை
வேற்றினை ! நிறைவேற்றினை !
|
விஜ.
|
பிராணநாதா !
பிராணநாதா !
[மனோஹரனைக் கட்டிக்கொள்ளு
கிறாள். ]
|
எல்லோரும்.
மனோஹரர் ! மனோஹரர் !
|
பு.
|
[ சிங்காதனத்தினின்றும்
இழிந்து மனோஹரனைக் கட்டியணைத்து ]
நான் கனவு காணவில்லையே ! இல்லை, இல்லை ! -கண்ணே !
மனோஹரா ! மனோஹரா ! இன்றே உன்னைப் பெற்றேன் !
இன்றே உன்னைப் பெற்றேன் !
[சத்தியசீலர், ராஜப்பிரியன்
பௌத்தாயனன் மூவரும் தங்கள்
தங்கள் முக மூடியைக் களைகின்றனர்.
சபையோரெல்லாம் சந்தோஷத்தால்
ஆரவாரிக்கின்றனர். ]
|
பு.
|
சத்தியசீலரே !
ராஜப்பிரியா ! பௌத்தாயனா ! -
இதென்ன எனக்குப் பயித்தியம் பிடிக்கும்போலிருக்கிறதே !
-என்ன ஆச்சர்யம்-மனோஹரா ! நீயோ எனதுயிரைக்
காப்பாற்றிய வீரகேசரி? ஆம் ஆம் ! உன்னையன்றி
வேறெந்த வீரன் அச்செய்கை செய்திருப்பான்? கண்ணே
! நான் உனக்குச் செய்த தீங்கிற்
|