|
கெல்லாம் என்ன கைம்மாறு செய்தனை ! சத்தியசீலரே !
அப்பொழுதே நீங்களின்னாரென ஏன் எனக்குக் கூறி
யிருக்கலாகாது?-ராஜப்பிரியா ! நீயாவது என்னிடம்
கூறியிருக்க லாகாதா?
|
விஜ.
|
மாமா, நான் அப்பொழுதே சொன்னேனே
கேட்டீர்களா? எப்படியும் பிராணநாதர் வந்து நமக்கு உதவி
செய்வாரெனச் சொல்லவில்லையா?-பார்த்தீரா மாமி,
இறந்துவிட்டார் இறந்து விட்டார் என்று வருந்திக்
கொண்டிருந்தீர்களே ! எனக்கு இப்பொழுது இறப்பதில்
லையென வாக்களித்துவிட்டு இறப்பாரோ ?
|
ப.
|
கண்ணே, உண்மையே, உன் புத்தியைக் கேட்பானேன் !
|
பு.
|
என்ன ஆச்சரியம் ! -ஏதோ என் முன்னோர்களுடைய
பூர்வ புண்யபலனே இது. என் மனைவியாகிய கற்பிற்கரசி
பத்மாவதியை நேரிற் காணப்பெற்றேன் ! என் மைந்தனாகிய
மனோஹரனும் வந்து சேர்ந்து விட்டான். மந்திரிகளுக்குள்
நாயகம் போன்ற சத்தியசீலரும் உயிர் பிழைத் திருக்கப்
பெற்றேன். ராஜப்பிரியன் முதலிய எல்லோரும் என்னை
அடைந்துவிட்டனர், இனி இவ்வுலகில் நான் பெறத்தக்க
தென்ன இருக்கிறது?
|
ப.
|
ஈசன்
அருள் !
காட்சி
முடிகிறது.
நாடகம்முற்றியது
Printed by Dowden & co., at the “Peerless Press” Madras.
|