தித்தும் தருவதில் மிகச்சிரமம்எடுத்துக்கொண்ட தஞ்டிச சங்கீத வித்யா மகாஜன சங்கம், Honorary Secretary உம், S. P. G. High School தலைமை உபாத்தியாயரும், தஞ்சை S. P. G. Church Organist உம் ஆன மகா---ஸ்ரீ A. C. பிச்சைமுத்து B.A., L.T., அவர்களுக்கு நான் மிகவும் நன்றிபாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். இப்புத்தகம் ஆரம்பமுதல் முடிவுவரையும் பிழை திருத்தவும், தமிழ் நூல் ஆராய்ச்சி செய்யவும், மிகவும் உதவியாயிருந்த தஞ்சை, கலியாண சுந்தரம் ஹைஸ்கூல் தமிழ்த் தலைமைப் பண்டிதர் மகா---ஸ்ரீ L. உலகநாதபிள்ளை அவர்களுக்கு மிகவும் நன்றிபாராட்டக் கடமைப் பட்டிருக்கிறேன். இப்புத்தகத்தில் வெவ்வேறு சுருதிமுறை சொல்வோர் கணக்குகளைப் பரிசோதனை செய்வதில், நான் கேட்டுக் கொண்டதற்கிணங்கச் சில காலம் உதவியாயிருந்த, காலஞ்சென்ற மகா---ஸ்ரீ V. இராமையாகாரு B.A. அவர்களுக்கு நான் மனப்பூர்வமான வந்தனம் சொல்லுகிறேன். இப்புத்தகம் கையெழுத்துப் பிரதியாயும், அரைகுறையாய் அச்சாகியும் இருக்கையில், அவைகளை வாசித்துப் பார்த்து, மிகுந்த சந்தோஷத்துடன் என்னை உற்சாகப்படுத்திய தமிழ் வித்வசிரோமணி, சோழவந்தான் மகா---ஸ்ரீ அரசஞ் சண்முகம்பிள்ளை அவர்களுக்கும், திருச்சிராப்பள்ளி, St. Joseph College தமிழ்த் தலைமைப் பண்டிதிர் மகா- - -ஸ்ரீ சவுரிராயபிள்ளை அவர்களுக்கும், பிரசிடென்ஸி காலேஜ் தமிழ்த் தலைமைப்பண்டிதர், உத்தமதானபுரம் மகாமகோ பாத்தியாயர், மகா- - -ஸ்ரீ வே, சாமிநாதையர் அவர்களுக்கும், விருதை மகா- - -ஸ்ரீ சிவ ஞானயோகி அவர்களுக்கும், சென்னை திராவிடியன் போர்ட் சேர்மென் தோட்டக்காடு மகா- - -ஸ்ரீ T. இராமகிருஷ்ணபிள்ளை F.M.U., F.R.H.S. அவர்களுக்கும், அம்பாசமுத்திரம் ஹைஸ்கூல் தமிழ்ப் பண்டிதர், மகா- - -ஸ்ரீ அரிகரபாரதியார் அவர்களுக்கும், சங்கீதத்திலும், கோட் வாத்தியத்திலும், கதை செய்வதிலும் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கும், அரிகேசவ நல்லூர், மகா- - -ஸ்ரீ L. முத்தையா பாகவதர் அவர்களுக்கும், விஜயநகரம் சமஸ்தான வைணீக சிரோமணி, மகா- - -ஸ்ரீ வீணை வேங்கடரமணதாஸ் அவர்களுக்கும், வையைச்சேரி மகா- - -ஸ்ரீ அப்பாசாமி ஐயர் அவர்களுக்கும், தஞ்சை மகா- - -ஸ்ரீ வேங்கடாசலமையர் அவர்களுக்கும், தஞ்சை மகா- - -ஸ்ரீ சாமியாபிள்ளை அவர்களுக்கும், என் மனப்பூர்வமான வந்தனம் சொல்லுகிறேன். இந்நுல் முடிவுபெறுஞ் சமயத்தில், திருக்கைலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனம் மஹா சன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ அம்பலவாணதேசிக மூர்த்திகளுக்குக் காண்பிக்க அவர்கள் இதனை அன்புகூர்ந்து முழுவதும் பார்வையிட்டு, ‘இத்தகைய நூல் தமிழ் மக்களுக்குப் பெரிதும் பயன் தரத்தக்கதே’ என்று சொல்லி மனமகிழ்ந்து ஆதரவு செய்ததற்காகப் பக்தி விநயத்துடன் நமஸ்கரிக்கிறேன். திருக்கோயிலூர் ஆதீனம் திருப்பாதிரிப்புலியூர் ஸ்ரீ ஞானியார் மடாலயம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரிய சுவாமிகள் இந்நூல் முழுவதும் பார்வையிட்டு அருமை பாராட்டியதற்காக மனப்பூர்வமாக நமஸ்கரிக்கின்றேன். இதிற் சொல்லப்படும் வித்வான்கள் பலருடைய சரித்திரக் குறிப்புகளையும், தேவார திருவாசகங்களில் வழங்கும் பண்களுக்குத் தற்காலத்தில் வழங்கும் இராகமுறைப்படி, மகா- -ஸ்ரீ
|