பக்கம் எண் :

70
முச்சங்கமிருந்த காலமும், அவைகளிலிருந்த புலவர்களும், இராஜாக்களும், நூல்களும்.

"செங்கோன் றரைச்செலவைச் சேந்தன் றனியூரான்
துங்கன் றமிழ்த்தாப் புலித்தொடரா-லங்கிசைத்தான்
சக்கரக்கோ முன்னின்று சாற்றும் பெருவூழி
யக்கரக்கோ நாமஞ்சு வாம்"

என்ற பஃறுளியாற்றுத் தலைப்பாய்ச்சல் ஏழ்தெங்கநாட்டு முத்தூர் அகத்தியன் கூறிய பாட்டினாற் புலனாகின்றது. இவையனைத்தையும் உற்றுநோக்குமிடத்து, எழுநூற்றுக்காவதம் அகன்று கிடந்த நாற்பத்தொன்பது தமிழ்நாடுகள் கடல் கொள்ளப்பட்டனவென்பது புலனாம். இக்காலத்து அளவின்படி ஒரு காவதமென்பது பத்து மைலாக, எழுநூறு காவதமும் ஏழாயிர மைலெல்லையளவாம். 'இந்துமகா சமுத்திரம்' இருநூற்றைம்பதுலக்ஷம் சதுரமைலுள்ளது. இதனால் அது சிறிது குறையப் பதினாறுலக்ஷம் மைல் நீளமும் பதினாறு லக்ஷம் மைல் அகலமுமுடையதென்பது பெறப்படும். பெறவே இப்பதினாறுலக்ஷம் மைல் நீளத்தில் ஏழாயிரம் மைலளவு நிலனாயிருந்து கடல் கொள்ளப்பட்டிருத்தல் வேண்டும். இனி 'மோரீசுத்தீவு'க்கும் 'பம்பாய்' நகரத்துக்கும் இடையிலுள்ள நீர்ப்பரவை இரண்டாயிரத் தைந்நூறு மைல் நீளமுள்ளதாம். மோரீசுத்தீவிற்கும் அதற்குத் தெற்கிலுள்ள 'கெர்கியூலன்' என்னுந் தீவிற்கும் இடையிலுள்ள நீளமும் அவ்வளவினதேயாம். ஆகவே நீளத்தில் இக்காலத்திலுள்ள 'குமரிமுனை' யிலிருந்து கெர்கியூலன் தீவின் தெற்கு வரையிலும், அகலத்தில் 'மடகாசிகர்தீவு' முதற் 'சுமாத்திரா', 'ஜாவா' முதலியவற்றை யுள்ளடக்கிய 'சந்தாத் தீவுகள்' அளவும் விரிந்து கிடந்த குமரிநாடு கடல் கொள்ளப்பட்ட தென்பது போதரும்.

இக்குமரிநாடுதான், கிழக்கே சந்தாத்தீவுகள் வரையினும் மேற்கே மடகாசிகர் தீவு வரையினும் அகன்று கிடந்ததாகக் கூறப்படும் 'லெமூரியா' என்ற நிலப்பரப்பாம். இந்நிலப்பரப்பு ஒரு காலத்தெழுந்த பெரு வெள்ளத்தில் ஆழ்ந்து போயிற்றென்றும் அவ்வாறு ஆழ்ந்துபோன பெருநிலம் இவ்வுலக முழுவதற்கும் நடுவிற்கிடந்த பெரும்பரப்பாகலான் மக்கள் முதன்முதல் இந்நிலத்திலிருந்து பின் நாற்றிசையினும் பிரிந்து சென்று வேறுபட்டனரென்றும், அங்ஙனம் இதிலிருந்த தொல்லோர் வழங்கியது தமிழ்ப் பாஷையாமென்றும், பல காரணங்கள் காட்டி விளக்கி நிறுவினார் மேற்புல விஞ்ஞானிகளுளொருவர்."

இப்படிப் பழமையான நாட்டிற்குத் தலைநகரம் தென்மதுரையென்றும், அவ்விடத்திலுள்ளோர் தமிழ்ப் பாஷையையே பேசி வந்தார்களென்றும், 549 சங்கப் புலவர்களிருந்தார்களென்றும், தமிழ்ப் பாஷையிற் சிறந்த 4,449 வித்வான்கள் வருஷந்தோறும் ஒவ்வொருவராக 4,440 வருஷங்கள் வரை தமிழச் சங்கத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தார்களென்றும், அதுபோலவே இடைச் சங்கமும் கடைச்சங்கமும் தொடர்ந்து நடந்து வந்தனவென்றும் பின்வரும் வசனங்களால் காணலாம்.

16. முச்சங்கமிருந்து காலமும், அவைகளிலிருந்த புலவர்களும்,இராஜாக்களும், அரங்கேற்றிய நூல்களும்.

தமிழ்மொழியின் வரலாறு, பக்கம் 95-100.

1. முதற்சங்கம்.

"இம் முச்சங்கங்களையும் பற்றி் 'இறையனாரகப்பொருளுரை'யின்கட் கூறப்பட்டிருப்பதே மிகப் பழமையான சரிதம். அதன் கண்ணே, தலைச்சங்கமிருந்தார் அகத்தியனாரும் திரிபுரமெரித்த விரிசடைக் கடவுளும் குன்றெறிந்த முருகவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனுமென இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருள்ளிட்டு நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்பது. அவர்களாற் பாடப்பட்டன எத்துணையோ 'பரிபாட'லும் 'முதுநாரை'யும் 'முதுகுருகு'ங் 'களரியாவிரை'யும் என இத்தொடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சினவழுதி முதலாகக் கடுங்கோனீறாக எண்பத்