தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்ளப்பட்ட மதுரையென்ப. அவர்க்கு நூல் 'அகத்தியம்' என்ப எனத் தலைச்சங்கத்தைப் பற்றியும், 2. இடைச்சங்கம். இனி இடைச் சங்கமிருந்தார் அகத்தியனாருந் தொல்காப்பியனாரும் இருந்தையூர்க் கருங்கோழி மோசியும் வெள்ளூர்க் காப்பியனும் சிறுபாண்டரங்கனும் திரையன் மாறனும் துவரைக் கோமானும் கீரந்தையுமென இத்தொடக்கத்தார் ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு மூவாயிரத்தெழு நூற்றுவர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன 'கலியு'ம் 'குருகு'ம் ‘வெண்டாளி’யும் ‘வியாழமாலையகவலு’மென இத் தொடக்கத்தனவென்ப. அவர்க்கு நூல் ‘அகத்திய’மும் ‘தொல்காப்பிய’மும், ‘மாபுராண’மும் ‘இசைநுணுக்க’மும் ‘பூதபுராண’முமென இவை. அவர் மூவாயிரத்தெழு நூற்றியாண்டு சங்கமிருந்தாரென்ப. அவரைச்சங்கம் இரீஇயினார் வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறனீறாக ஐம்பத்தொன்பதின்மரென்ப. அவருட் கவியரங்கேறினார் ஐவர் பாண்டியரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப்போலும் பாண்டியனாட்டைக் கடல்கொண்டது என இடைச் சங்கத்தைப் பற்றியும் பல கூறப்பட்டுள. இக்கூற்றுக்களை யாம் ஆராய்ந்து பார்க்குமிடத்து, தலைச்சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய ஐம்பதைம்ப தாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும், இடைச் சங்கத்தை ஒவ்வொரு பாண்டியனும் ஏறக்குறைய அறுபத்துமூன் றறுபத்துமூன் றாண்டுகளாக நடாத்த அது நடந்து வந்திருத்தல் வேண்டுமென்பதும் போதருகின்றன. இச் சங்கங்களிரண்டும் நீடித்த காலம் நடந்து வந்திருக்க வேண்டுமென்பதிலும் பல நூல்களியற்றப் பட்டனவென்பதிலும், பாவலர் பலர் சங்கத்தை யொட்டி வாழ்ந்தனரென்பதிலும், சங்கமிரண்டும் முறையேயிருந்த மதுரையுங் கபாடபுரமுங் கடல் கொள்ளப்பட்டனவென்பதிலும், அது காரணமாகப் பல அரிய தமிழ் நூல்கள் அழிந்துபட்டன வென்பதிலும் ஐயப்பாடில்லையென்னலாம். மற்றுப் பாண்டிய ராசர்கள் முறையே ஐம்பதாண்டும் அறுபத்துமூன்றாண்டுமாக ஆண்டு வந்தனரென்றுரைத்தல் ஐயுறற்பாலதே. ஆயினும், பாண்டியர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத்தொன்பதின்மரும் ஒரே தொடர்ச்சியாக ஆண்டு வந்தனரென்று கருதாது, நடுவில் இடையீடுபட்டு அரசின்றிக் கழிந்த ஆண்டுகளும் இவ்வாண்டுகளுடன் கூட்டிக்கொள்ளப் பட்டிருத்தல் வேண்டுமென்று கருதுக. இவ்வாறு தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றியாண்டில் இடையீடு பட்டுக் கழிந்தன எத்துணை யாண்டுகளோ? இடைச்சங்கமிருந்த மூவாயிரத்தெழுநூற்றியாண்டில் இடையீடுபட்டுக் கழிந்தனயர் எண்பத்தொன்பதின்மரும் பாண்டியர் ஐம்பத் தொன்பதின்மரும் ஆண்ட காலத்தின் அளவு குறைந்து நம்புதற் பாலதாகு மென்க. இத்துணை யுய்த்துணரமாட்டாத சிலர் வேறுபடக் கூறுவர். 3. கடைச்சங்கம். களவியற் பொருள்கண்ட கணக்காயனார் மகனார் நக்கீரனாரினின்றும் பத்தாந் தலைமுறையாளராகிய நீலகண்டனார் "கடைச்சங்கமிருந்து தமிழாராய்ந்தார் சிறு மேதாவியரும் சேந்தம் பூதனாரும் அறிவுடையரனாரும் பெருங் குன்றூர்கிழாரும் இளந்திருமாறனும் மதுரையாசிரியர் நல்லந்துவனாரும் மருதனிள நாகனாரும் கணக்காயனார் மகனார் நக்கீரனாருமென இத்தொடக்கத்தார் நாற்பத்தொன்பதின்மரென்ப. அவருள்ளிட்டு நானூற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினாரென்ப. அவர்களாற் பாடப்பட்டன ‘நெடுந்தொகைநானூறு’ம் ‘குறுந்தொகை நானூறு’ம் ‘நற்றிணைநானூறு’ம் ‘ஐங்குறுநூறு’ம் ‘பதிற்றுப்பத்து’ம் ‘நூற்றைம்பதுகலியு’ம் ‘எழுபதுபரிபாடலு’ம் ‘கூத்து’ம் ‘வரி’யும் ‘பேரிசை’யும் ‘சிற்றிசை’யுமென்று இத்தொடக்கத்தன. அவர்க்கு நூல் ‘அகத்திய’முந் ‘தொல்காப்பிய’முமென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்து ஆயிரத்தெண்ணூற் றைம்பதிற்றியாண்டென்ப. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போந்திருந்த முடத்திரு மாறன் முதலாக உக்கிரப் பெருவழுதி யீறாக நாற்பத்தொன்பதின்மரென்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது ‘உத்தரமதுரை’ யென்ப. அவருட்கவியரங்கேறினார் மூவர் பாண்டியரென்ப "என்று கடைச்சங்கத்தைப் பற்றிக் கூறாநின்றனர்."
|