பக்கம் எண் :

72
முச்சங்கமிருந்த காலமும், அவைகளிலிருந்த புலவர்களும், இராஜாக்களும், நூல்களும்.

[இதோடு கடைச்சங்கக் காலத்தின் இறுதியில் திருவள்ளுவர் திருக்குறளை அரங்கேற்றிய காலத்திலிருந்த சங்கப்புலவர்கள் சாற்றுக்கவி கொடுத்திருக்கிறார்கள். அதைக் கொண்டு மூன்றாவது சங்கத்தின் கடைசியிலிருந்த வித்வசிரோமணிகளின் பெயர்கள் சில தெரியவருகிறது. அவையாவன :-

1. இறையனார்27. மதுரைத் தமிழ்நாயகனார்
2. உக்கிரப்பெருவழுதியார்28.பாரதம்பாடிய பெருந்தேவனார்
3.கபிலர்29. உருத்திர சன்மகண்ணர்
4.பரணர்30. பெருஞ்சீத்தனார்
5. நக்கீரர்31. நரிவெருத்தலையார்
6. மாமூலனார்32. மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர்கிழார்
7. கல்லாடர்33. மதுரையறுவைவாணிகர் இளவேட்டனார்
8.சீத்தலைச் சாத்தனார்34. கவிசாகரப் பெருந்தேவனார்
9. மருத்துவன் றாமோதரனார்35. மதுரைப்பெருமருதனார்
10. நாகன்றேவனார்36. கோவூர்க்கிழார்
11. அரிசிற்கிழார்37. உறையூர் முதுகூற்றனார்
12.பொன்முடியார்38. இழிகட் பெருங்கண்ணனார்
13.கோதமனார்39. செயிர்க்காவிரியார்மகனார் சாத்தனார்
14. நத்தத்தனார்40. செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
15.முகையலூர்ச் சிறுகருந்தும்பியார்41. வண்ணக்கஞ் சாத்தனார்
16.ஆசிரியர் நல்லந்துவனார்42. களத்தூர்க்கிழார்
17. கீரந்தையார்43. நச்சுமனார்
18. சிறுமேதேவியார்44. அக்கராக்கினி நச்சுமனார்
19. நல்கூர் வேள்வியார்45. நப்பாலத்தனார்
20. தொடித்தலை விழுத்தண்டினார்46.குலபதிநாயனார்
21. வெள்ளிவீதியார்47. தேனிக்குடிக்கீரனார்
22. மாங்குடி மருதனார்48. கொடிஞாழன் மாணிபூதனார்
23. எரிச்சலூர் மலாடனார்49.கவுணியனார்
24. போக்கியார்50. மதுரைப்பாலாசிரியனார்
25. மோசிகீரனார்51. ஆலங்குடி வங்கனார்
26. காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார்

மேற்கண்ட வித்வசிரோமணிகள் தமிழில் வைத்த அபிமானத்தை அவர்கள் சொல்லிய பாக்களினால் தெளிவாய் அறியலாம்.]

தமிழ் மொழியின் வரலாறு.

"இக்கூற்றை யாராயுமிடத்துப் பாண்டியர் நாற்பத்தொன்பதின்மரும் ஆண்ட காலம் இடையீடு பட்டுக் கழிந்த காலத்தோடுங்கூடி ஆயிரத் தெண்ணூற் றைம்பதிற்றி யாண்டாகின்றது. பாண்டியரொவ்வொருவரும் (இடையீட்டுக் காலத்தொடுங்கூட்டி) முப்பத்தெட்டாண்டுகள் அரசாட்சி செய்தவராகின்றனர். இது நம்புதற்பாற்றே. இனித் தலைச்சங்கமிருந்த நாலாயிரத்து நானூற்று நாற்பது வருஷங்களும் இடைச்சங்கமிருந்த மூவாயிரத்தெழுநூறு வருஷங்களும் கடைச்சங்கமிருந்த ஆயிரத் தெண்ணூற்றைம்பது வருஷங்களுமாகக் கூடி ஒன்பதினாயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூறு வருஷங்களாகின்றன. இதனைக் கி. பி. நூற்றிலிருந்து பிற்கணக்கிட்டுச் சென்றால் தலைச்சங்கம் கி. மு. ஒன்பதினாயிரத் தெண்ணூற்றுத் தொண்ணூறு வருஷங்கட்கு முன்னர்த் தாபிக்கப்பட்டிருத்தல் வேண்டும். தமிழ் மொழியின் தொன்மை மாட்சி கூறி வந்தவிடத்து, கி. மு. 8,000 ஆண்டுகட்கு முற்பட்ட எழுத்துச் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுளவென்றமையால் அதனினும் ஏறக்குறையப் பத்தொன்பது நூற்றாண்டுகள் முன்னரே தலைச்சங்கமேற்பட்டு விட்டதென்றல் சாலாதென வாதித்தற்கும் இடமுண்டு. * * * * * * * *