எருசலேம் தேவாலயத்தில் பன்னிரண்டு வெண்கல எருதுகளால் சுமக்கப்பட்ட கடல் தொட்டியில் நான்கு திசைகளுக்கும் எதிராக 96 மாதுளம்பழங்கள் செய்து வைக்கப்பட்டதென்று ஏரேமியா 52: 23 ல் காணப்படுகிறது. “தொண்ணூற்றாறு மாதுளம்பழங்கள் நான்கு திசைகளுக்கும் எதிராக செய்திருந்தது. மேற்படி வாக்கியங்களில் காணப்படும் இலக்கங்களும் கணிதமுறையும் தூல சூக்கும காரண சரீரங்களின் தத்துவங்களையே தொன்று தொட்டு குறிப்பிட்டு வழங்கிவந்தவைகள் என்று நாம் அறிவோம். முடிவில் அவைகள்யாவும் ஒரே பொருளைக்குறித்தாக இருக்கின்றன. இப்பிண்டத்தின் பாகுபாடுகளத்தனையும் அண்டத்திலும் அண்டத்திற் கண்டவைகளையே சோதிடத்திலும், சங்கீதத்திலும் வைத்திய சாஸ்திரத்திலும் கண்டார்கள். ஆகவே உடற்கூறு சாஸ்திரம் வேதாந்த சாஸ்திரம், சோதிட சாஸ்திரம், சங்கீத சாஸ்திரம், யோக சாஸ்திரம்என்னும் முக்கியமான கலைகளில் இவ்வெண்களையும் உபயோகப்படுத்தி யிருக்கிறார்கள். சங்கீதத்தில் மனிதனுடைய குரலும் அதன்பின் யாழின் ஓசையும் ஒத்திருக்கும் என்பதாக நாம் அறிவோம். அதுபோலவே அளவிலும் கணிதமுறையிலும் ஒத்திருக்கு மென்பதைப் பார்த்தோம். இனி ஒசையின் அலைகளுக்கும் மனிதனுடைய மூக்சுக்கும் சம்பந்தமிருக்கிற தென்பதையும் நாம் பார்க்கவேண்டும். 4. மனுட சுவாசத்திற்கு யாழ் ஓசையின் அலை ஒத்திருக்கிறதென்பது. யாழின் தூலவடிவமும் மனுட சரீரத்தின் தூலவடிவமும் ஒருவாறு ஒத்திருக்கிறதென்று சில குறிப்புக்களினால் பார்த்தோம். அதன்பின் மனுடர் சூக்கும சாரத்தின் தத்துவங்களையும் யாழினது சூக்கும தத்துவமாகிய பல ஓசைகளையும் ஒத்துப்பார்த்தோம். அதுபோலவே மனுட சரீரத்திற்குக் காரணமாய் விளங்கும் பிராண வாயுவின் இயக்கத்தையும் யாழில் பிராண வாயுவின் இயக்கத்திற்கு ஒத்ததான ஓசையின் அலைகயையும் நாம் ஒத்துப்பார்க்க வேண்டும். இது சற்று கருகலாயிருப்பதினால் அறியக்கூடிய விவேகிகளின் கவனத்திற்கு வேண்டிய சில குறிப்புக்களை மாத்திரம் இங்கு பார்ப்போம். பிராணவாயுவின் இயக்கத்தினாலேயே நாத வேற்றுமைகள் உண்டாகின்றனவென்பதை நாம் அறிவோம். முதல்வனாகிய கர்த்தன் திருவாய் மலர்ந்தருளிய வார்த்தைகள் அல்லது நாதங்கள் அண்டபுவன சராசரங்கள் யாவும் உண்டாவதற்கு வித்தாயிருந்தனவென்று நாம் யாவரும் நம்புகிறோம். காட்டாமணக்கின்பால் அல்லது சவுக்காரம் கரைத்த தண்ணீர்போன்றவற்றை ஒரு இலையில்வைத்துக்கொண்டு வட்டமிருக்கும்படி முடிச்சுப்போட்ட ஒரு அறுகந்தண்டைத்துவைத்து ஊதி விளையாடும் சிறுவர்களை நாம் பார்த்திருப்போமே. அவர்கள் மெதுவாக ஊதும் பொழுது புல்வட்டத்திலுள்ளபால் பெரிதும் சிறிதுமான அனேக அண்டங்களாகி ஆகாயத்தில் பறந்து மறைந்து போவதைக்காண்கிறோம். வேகமாக ஊதும் பொழுது பலசிறிய கோளங்கள் உண்டாவதையும் நிதானமாக ஊதும்பொழுது பெருங்கோளங்கள் உண்டாவதையும் நாம் பார்க்கிறோம். இப்படி உண்டாகும் கோளங்கள் சொற்ப நேரந்தான் இருக்கக்கூடியதாயிருப்பதினால் சிறுவர்கள் அடுத்தடுத்துப் புல் வளையத்தைத் துவைத்து ஊதிப் பெரிதும் சிறிதுமான எண்ணிறந்த வானசோதிகளைப்
|