பக்கம் எண் :

812
கருணாமிர்த சாகரம்.முதல் புஸ்தகம்.- நான்காவது பாகம் - கர்நாடக சங்கீதத்தின் சுருதிகள்

வராகோபநிஷத் பக்கம் 401.

இந்தத் தேகத்திலே வாயுமண்டலத்தினுடைய மோதுதலினாலே இருபத்து ஒராயிரத்து அறுநூறு (21,600) சுவாசம் உண்டாகிறது. பிருதிவிமண்டலம் குறைந்தால் தேகத்தை யுடையவர்களுடைய தேகத்தில் மடிப்புக ளுண்டாகின்றன. ஜலபாகம் குறைந்தால் கிரமமாய் நரையுண்டாகிறது தேஜஸ் குறைந்தால் பசியும் காந்தியும் குறைகின்றது. வாயுபாகம் குறைந்தால் எப்போதும் நடுக்கலுண்டாகிறது. ஆகாசபாதம் குறைந்தால் சீவித்திருக்கிறதேயில்லை.

சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை பக்கம் 84.

“தசநாடிகளாவன; இடை பிங்கலை முதலிய பத்தும் மூலாதரத்து எழுபத்தீராயிரநாடிகளும்ட பீர்க்கங்கூட்டின் மூன்று கண்ணும் போல இடை பிங்கலை சுழுமுனையென்னும் மூன்று நாடிகளுமாய் நடுவுநின்ற சுழுமுனையொழிய இரண்டானும் மேனோக்கியேறி இரண்டு மூக்கானும் ஒரோர்பாரிசத்து ஐந்து நாழிகையாகக் கொண்டு ஒரு மாத்திரையில் நூற்றிருபத்தைந்து சுவாதமாய் இரு சுவாதத்திலே பன்னிரண்டங்குலி வாயுப்புறப்பட்டு நாலங்குலிதேய்ந்து எண்விரலடங்கு கின்றது பிராணவாயு வெனக்கொள்க. மாத்திரையாவது: இரண்டரை நாழிகையை எட்டுக்கூறிட்டு ஒரு கூறென்றறிக.”

இதில் ஒரு நாழிகைக்கு 400 மூச்சாக 60 நாழிகையில் 24,000 மூச்சுக்கணக்காகிறது. 21,600 சுவாசம் என்ற கணக்குப் பெரும்பாலும் வழங்கிவருகிறது. சாதாரணமாய் மக்களுடைய சுவாசத்தில் குறைந்தது 21,600 என்றும் கூடினது 24000 என்றும் நாம் எண்ண இடமிருக்கிறது. யோகசாதனையில் பழுகுகிறவர்கள் 21,600 என்றே கணக்கு ஆரம்பித்துக் கொள்ளவேண்டியதுஎன்று நினைக்கிறேன்.

வீமேசுரஉள்ளமுடையான் பக்கம் 19.

38. “கூறுவேன் வீமநாதர்தாள் சென்னிமேற்
கொண்டுசுவாச மிருபத்தோராயிரத்
தாறுநூறுகிரேதாயுக மெண்பதி
னாற்பெருக்கத்தி ரேதமறுபதா
லேறுநாற்பதி லேற்றத்துவாபர
மிருபதாலே பெருக்கக்கலியுக
மீறிச்சென்றது மூவாயிரத்தொரு
நூறுமேழ்பத்து மொன்பதாய் மேவுமே.”

(இ-ள்) விமேசுரர்திருவடியை சென்னிமேல் வைத்துக்கொண்டு சுத்தகணிதாங்கம் பிறக்கும்படி அண்டநாயகனுக்குச் சரம் இரவி முதலான கிரகங்கள் இராசிநட்சத்திரங்கள். ஒரு சுவாசம் விடுகிறது பகல்-30 நாழிகையாம் உள்ளேவாங்குகிற சுவாசம் இராத்திரி 30 நாழிகையாம். இதை 60 நாழிகையாம் அண்ட நாயகனுக்கு ஒரு சுவாசமென்றறிக. இந்த ஒரு சுவாசம் பூலோக நாயகனுக்கு ஒரு தினமென்றறிக. இப்படி அண்ட நாயகனுக்கு-21960-சுவாசமும் ஒருதின மென்றறிக. இந்த அண்டநாயகனின் சுவாசமே தேவர்களும் கிரகங்களும் ரிஷிமுநீசுரரும் மற்றுமுள்ளவை களெல்லாம் இப்படி நடக்கிறதென்றறிக. இந்த அண்டநாயகனின் சுவாசம் ஒன்று பூலோகநாயகனுக்கு -21960 சுவாசமாய் நடக்கும். 21960யும்-80-ல் பெருக்க-107-லட்சத்து-289 வருஷம் கிரேதாயுகமென்றறிக. இனி திரேதாயுகம்-610ல் பெருக்க 102-லட்சத்து-969 வருஷமென்றறிக. இனி துவாபரயுகம்-40-ல்-பெருக்க 8-லட்சத்து 649-வருடமென்றறிக. இனிக்கலியுகம் 20-ல் பெருக்க 4-லட்சத்து 329-வருஷமென்றறிக. இப்போது கலியுகத்தில் சாலிவாகனன் ஆண்டதற்குமுன் சென்றது-3179 வருஷமாம். எ-று.

மகமேருவைச் சூரியன் 21,600 தரம் சுற்றிக்கொண்டுவரும் காலமானதுஒரு நாளாகச் சொல்லப்படுகிறது. அதாவது மனுடனுடைய ஒரு நாளானது பூமிக்கு ஒரு சுற்றாகவும் சூரியனுக்கு ஒரு மூச்சாகவும் கணக்கிடப்படுகிறது. அப்படியானால் ரேசக பூரகமான 21,600