| மும்மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து ஜில்லா மன்றத்துக்கு அனுப்ப வேண்டும். பல தாலுக்கா மன்றங்களிலிருந்து வந்த உறுப்பினர்கள் ஜில்லா மன்றமாக அமைந்து அந்த ஜில்லாவை ஆட்சி புரிவார்கள். இவ்வாறு அமைந்த ஜில்லா மன்றங்கள் மூம்மூன்று பேரைத் தேர்ந்தெடுத்து மாகாணத் தலைநகரத்திலுள்ள பாராளுமன்றத்திற்கு அனுப்பலாம். அவர்களுக்கே அமைச்சர் குழுவை அமைக்கும் பொறுப்பு இருக்க வேண்டும். (நாடு முழுவதிற்கும் பொதுவான நாட்டுப்பாராளுமன்றத்திற்கும் மாகாண மன்றங்களே உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்). கட்சி அமைப்புக்கு முற்றிலும் முரணான தேர்தல் முறை இது. எவ்வாறு? செங்கல்பட்டு ஜில்லாவில் இந்த முறையின்படி தேர்தல் நடைபெறுவதாக வைத்துக் கொள்வோம். காட்டுப்பாக்கம் கிராமத்தில் ஓர் ஊர் மன்றம் (பஞ்சாயத்து) அமைய வேண்டும். அதற்கு ஐந்து பேரோ ஏழுபேரோ உறுப்பினர்கள் வேண்டும். சென்னையிலிருந்து கட்சித் தலைவர் என்ன செய்ய முடியும்? பத்திரிகைகள் கதற முடியுமா? தாம் விரும்பியவாறு உரிமை இழந்து அடங்கி நடக்கும் ஒருவரை வெளியே இருந்து கொண்டுபோய் நிறுத்தினால் ஊரார் ஏற்றுக் கொள்வார்களா? உள்ளூரார் ஒருவரையே பார்த்து அடங்கி நடப்பவரா? என்று ஆராய்ந்து தேர்தலுக்கு நிறுத்தலாம். ஆனால் ஊரார் அவருக்கே வாக்குரிமை கொடுப்பார்களா? அவருடைய பண்புகளைப் பற்றிக் கட்சித் தலைவர் சென்னையிலிருந்து சொன்னால் ஊரார் கேட்பார்களா? பத்திரிகைகள் கதறினாலும் நம்புவார்களா? "இவரைப் பற்றி எங்களுக்குத் தெரியாமல் சென்னையில் இருப்பவர்களுக்கு |