பக்கம் எண் :

கட்சி அரசியல் 111

ஆற்றலைக் கொண்டு தன் குழந்தையை அடக்கவில்லையா? அதுபோலவே,
அறத்தையும் மறந்து அடக்குமுறையைக் கையாள வேண்டி வருகின்றது. இது
தான் நல்ல வாய்ப்பு என்று தேர்தலில் தோற்ற எதிர் கட்சியார்
பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டிவிட்டுத் தம் கட்சியை
வலுப்படுத்துகின்றார்கள். யானை பூனை ஆகலாம் என்றும், பூனை யானை
ஆகலாம் என்றும் பொது மக்கள் காத்திருக்கின்றார்கள்.

     லட்சக்கணக்கான மக்கள் முன்பின் தெரியாத ஒருவரைத்
தேர்ந்தெடுக்கும் தேர்தல் இருந்தால்தான் கட்சிவாழும். இதனாலேயே
அரசியல் தலைவர்கள் இந்தக் கட்சித் தேர்தலை மாற்ற இடம் தராமல்
போற்றி வருகின்றார்கள்.

தகுதித் தேர்தல்

     தேர்தலில் இன்னொரு முறை உள்ளது. அது சிறு பகுதிகளில் தகுதித்
தேர்தலாக இருக்கும். பிறகு மன்றங்களின் தேர்தலாக இருக்கும். இதன்
வழியாகவும் பாராளுமன்றத்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கலாம்,
அதாவது: ஒவ்வொரு சிறிய கிராமத்திலும் அந்த ஊர் மக்கள் அந்த ஊரில்
வாழும் சிலரைத் தேர்ந்தெடுத்து ஊர் மன்றத்துக்குப் (பஞ்சாயத்துக்கு)
அனுப்ப வேண்டும். இந்த ஊர் மன்றம் ஒருவரைத் தேர்ந்தெடுத்துத் தாலுக்கா
மன்றத்துக்கு அனுப்ப வேண்டும். இப்படிப் பல உறுப்பினர்கள் சேர்ந்து
தாலுக்கா மன்றம் நடைபெறும். அந்தக் தாலுக்காவை அந்த மன்றம்
ஆட்சிபுரியும். தாலுக்கா மன்றங்கள்