பக்கம் எண் :

110அறமும் அரசியலும்

நுழைகின்றார்கள்; நாளடைவில் கட்சியைத் தம் கையின் கீழ்க் கொண்டு
வருகின்றார்கள்.

     இவ்வாறு அரசியலை அமைக்கப் புகுந்தவர்கள் கட்சிகளை அமைக்கத்
தொடங்குகின்றார்கள். நாட்டை ஒன்றுபடுத்தி ஆள எண்ணியவர்கள்
நாட்டைப் பிளவுக்கும் பிரிவுக்கும் உட்படுத்திக் கட்சியை ஆள்வதில்
கருத்தைச் செலுத்துகின்றார்கள். நாடே பெரியது என்று நல்லெண்ணம்
கொண்டு தேர்தலுக்கு வந்தவர்கள் கட்சியே பெரியது என்று கங்கணம்
கட்டுகின்றார்கள். நாட்டில் அறத்தையும் அமைதியையும் நிலைநிறுத்த
விழைந்து தொடங்கியவர்களும் நாளடைவில் கட்சியை நிலைநிறுத்த
முனைகின்றார்கள்; அமைதியைக் குலைத்து அறத்தையும்
புறக்கணிக்கின்றார்கள்.

     எப்படியோ ஒரு கட்சி செல்வாக்குடன் தேர்தலில் வெற்றி பெறுகின்றது;
அமைச்சர் குழு அமைத்து ஆள்கின்றது. இயன்றவரையில் மக்கள்
நன்மைக்காகப் பாடுபட முயல்கின்றது. ஆனால் அமைச்சராக உள்ள
சிலருடைய கையிலே முழுப்பொறுப்பும் இருக்கின்றதா? இல்லை. அவர்கள்
என்ன செய்வார்கள்? கட்சியின் தலைமை நிலையத்திலிருந்து தம்மைவிடச்
செல்வாக்கு உள்ளவர்கள் அவ்வப்போது இடுகின்ற ஆணைகளுக்குக்
கட்டுப்பட வேண்டி இருக்கின்றது. ஆகவே, பொதுமக்களின் விருப்பம் ஒரு
பக்கம்; கட்சித் தலைவர்களின் ஆணை ஒரு பக்கம். பொதுமக்களின்
விருப்பத்தை மிகுதியாகப் புறக்கணிக்கத் தொடங்கினால், எதிர்ப்பு உணர்ச்சி
வலுவடைகின்றது. இதை எவ்வாறு அடக்குவது? பெற்ற தாயும் அன்பின்
ஆற்றலை மறந்து பிரம்பின்