பக்கம் எண் :

கட்சி அரசியல் 109

நின்று அரசியலில் தொண்டு செய்ய வல்லவர்களும் அந்தக் கட்சியில் சேர
முந்துகின்றார்கள்.

     ஒரு கட்சியில் நல்லவர்களும் சேர்வார்கள்; கெட்டவர்களும்
சேர்வார்கள். நல்லவர்கள் சேர்ந்து ஆக்கவேலை செய்வார்கள் கெட்டவர்கள்
சேர்ந்து அழிவு வேலை செய்வார்கள். எந்தக் கட்சியிலும் நன்மை தீமை
கலந்திருப்பது இதனால்தான். இதைத் தடுக்க முடியாது. கெட்டவர்கள் செய்யும்
வேலையும் கட்சியின் பெயராலேயே செய்யப்படுகின்றது. அதனால் அந்தப்
பகுதியை ஒழிக்க வேண்டும் என்று சிலர் முயற்சி செய்யத்
தொடங்குகின்றார்கள். கெட்டவர்களின் செல்வாக்கு அசைக்க முடியாததாக
இருக்கும்போது, வேறு வழி இல்லை என்று இவர்கள் வெளியேறி எதிர்கட்சி
அமைக்கின்றார்கள். எதிர்கட்சி அமைத்தவுடன், நடுநிலைமையில் நின்றால்
மக்கள் திரள மாட்டார்கள் என்பதை உணர்ந்து, மற்றக் கட்சியைப் பழிப்பதும்
தம் கட்சியைப் புகழ்வதுமே கடமையாகக் கொள்கின்றார்கள். பொதுமக்கள்
பொய்க்கும் பித்தலாட்டத்திற்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்கள் என்பதை
உணர்ந்து தேர்தல் காலத்திற்கு வேண்டிய முறையில் நெறி தவறி
மனச்சான்றையும் கொன்று எதிர்ப்பு வேலையைச் செய்கின்றார்கள். மற்ற
கட்சியாரும் இவர்களை எதிர்த்து அடக்குவதே முதல்கடமை என்று கட்சிப்
போர்க்களத்தில் இறங்குகின்றார்கள். அழிவு வேலை செய்வதிலும், அறத்தை
மறந்து செல்வாக்கைத் தேடுவதிலும் போட்டியிடுகின்றார்கள். இந்தப் போட்டி
வேலைக்குத் துணையாகச் செல்வரை நாடுகின்றார்கள். 'இதுவும் நல்லதே,
கட்சிச் சார்பு இருந்தால் நாமும் கவலை இல்லாமல் இருக்கலாம்' என்று
செல்வர்களும்