| அறமும் போய், ஆட்களும் போய், கட்சி என்ற ஒன்றை வணங்கி வழிபடும் நிலைமை வருகின்றது. எங்கே தனியுரிமை? கட்சி அமைப்பு கட்சி என்பது என்ன? செல்வாக்கு என்பதன் கூட்டுப்பண்ணை; தனித்தனியே தம் செல்வாக்கைப் பயன்படுத்துவதில் இடையூறும் தோல்வியும் கண்டபோது, செல்வாக்குக் குன்றாமல் காக்கும் வகையில் அமைத்த கூட்டுப் பண்ணை, தனித்தனியே உண்டிகளில் சேர்த்து வைத்தால் திருட்டுக்கும் கொள்ளைக்கும் எளிதில் இரையாக வேண்டிவரும் என்று அதை விட்டுப் பலர் சேர்ந்து நிதிநிலையம் (பாங்கி) ஏற்படுத்தி நடத்திப் பணத்திற்குப் போக்கு இல்லாமல் காத்துக் கொள்ளவில்லையா? தனித்தனியே துணிந்து வியாபாரம் நடத்தினால் என்ன இடர் வருமோ, எப்படிக் கவிழுமோ என்று அஞ்சிச் சிலர் சேர்ந்து கூட்டு வாணிகம் நடத்தவில்லையா? அவைபோல் தனித்தனியே அரசியலில் செல்வாக்குத் தேடினால் என்ன தோல்வி வருமோ என்று அஞ்சி, தோல்வி வராமல் காத்துக்கொள்வதற்காக அமைத்த கூட்டுச் செல்வாக்குப் பண்ணையே கட்சியாகும். இவ்வாறு நிதி நிலையம் அமைத்த பிறகு, வீட்டில் தனியே பணம் சேமிப்போரும் அச்சமில்லை என்று உணர்ந்து தம் பணத்தைக் கொண்டு வந்து சேர்க்கவில்லையா? தனித்தனியே வியாபாரம் செய்கின்றவர்களும் பெரிய கூட்டு வாணிகத்தில் பங்கு எடுக்கவில்லையா? அவைபோல், கட்சி அமைத்த பிறகு, தனியே |