| வாய்ப்பு மிகமிகக் குறைவு என்பதே அல்லாமல் வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. இன்று தோட்டமாக உள்ள வாழை மரங்களும் தோப்பாக உள்ள தென்னை மரங்களும் தொடக்கத்தில் தனித்தனியாக நட்டு வளர்க்கப்பட்டவைகளே அல்லவா? அவைகள் தோட்டமாகத் தோப்பாக வளர்ந்துவிட்ட பிறகும் பயன் தரும்போது தனித்தனியாகக் கவனிக்கப் படுகின்றன அல்லவா? வளர்ச்சியில் குறைபாடு தோன்றிய போதோ, அல்லது வேற்றுமை காணப்பட்ட போதோ தனியாகக் கவனிக்கப்படுகின்றன அல்லவா? எதிர்காலத்தில் மக்கள் வாழ்க்கையிலும் இந்த அளவுக்குத் தனி வளர்ச்சி போற்றப்படும். நீர் பாய்ச்சுதல், எரு இடுதல், வேலி அமைத்தல், காவல் காத்தல் முதலியவற்றில் தனி மரங்களைக் கவனித்துப் போற்றுவது இல்லை. அதுபோலவே, சில துறைகளில் தனி உரிமையும் தனி நலமும் மக்களுக்குக் கிடைக்க வழி இருக்காது. பொதுமையே நிலவும். ஆனால், கருத்தை வளர்க்கும் முறையிலே, கருத்தை வெளியிடும் வகையிலே, அன்பை வளர்க்கும் துறையிலே, தொண்டு ஆற்றும் நெறியிலே தனி உரிமை இருக்கும்; தனி நலமும் கிடைக்கும். காதலராய் அன்பைப் பெருக்கி வாழும் உரிமைக்கும் குடும்பம் அமைத்து வாழும் நலத்திற்கும் எப்போதும் தடை இருக்கக்கூடாது. தொண்டு செய்யும் நோக்கம் சிறந்தபோது வேறொரு தொழில் செய்யுமாறு வற்புறுத்தித் தொண்டு செய்வதற்குத் தடை செய்யக் கூடாது. தொண்டு செய்ய விரும்பும் துறையே தொழில் செய்யும் துறையாகவும் அமையுமாறு ஏற்பாடு இருக்கவேண்டும் மருத்துவத் துறையில் தொண்டு செய்ய வேண்டும் என்ற நோக்கம் உடைய ஒருவரைத் தபால் நிலையத்தில் |