| எழுதுவர்; சில இடங்களில் மட்டும் சிறப்பான நடையைக் கையாள ்வர். வேறு சிலர், பிறர் மதிக்க வேண்டும் என்ற கருத்து நிரம்பிய வராய், எதை எழுதினும் செயற்கையான மன நிலையோடு பிறர்க்கு எளிதில் விளங்காத கடு நடையை மேற்கொள்வர். அதையே உயர்ந்த நடை என்று கற்பவர் மயங்குதல் உண்டு. உயர்ந்த நடை என்பது பலர்க்கு விளங்காத அருஞ்சொற்கள் நிறைந்தது அன்று. வேண்டுமாயின், அதனைக் கடுநடை எனலாம். புலவர்கள் மற்ற மக்களின் வேறுபட்டவர்கள் என்று காட்டும் நோக்கம் சிறிது இருந்திருத்தல் கூடும்.அதைவிட மிகுதியாக புலவர இயற்றும் இலக்கியத்தின் மொழி மற்றவர்களின் மொழியினின்று வேறுபட்டது என்ற கருத்து நிலவியிருந்தது.செய்யுள் வழக்கு உலக வழக்கு என்ற பாகுபாடும் இதனை ஓரளவு உணர்த்துகின்றது. நூற்கல்வி இல்லாதவனுக்கு விளங்கும் மொழிநடை இலக்கியத்திற்கு உரியது அன்று என்ற தவறான கருத்து இடைக்காலத்தில் - உரையாசிரியர் காலத்தில் - இருந்தது என்று கருதத் தக்க சான்றுகள் உண்டு. அதனாலேயே நச்சினார்க்கினியர் முதலானவர் சில சொற்களுக்குப் பொருள் விளக்குமிடத்தில் பலரும் அறிந்த எளிய பொருள் கூறி நேரே விளக்காமல், வேறு பொருள் கூறித் தம் திறமையைக் காட்டுவதற்கு முயன்றனர். அத்தகைய முயற்சி இல்லாதவரை அக்காலத்தவர் சிறந்த புலமை இல்லாதவர் என்று கருதினர் போலும். அதனால் பிறர்பால் நன்மதிப்புப் பெறும் பொருட்டு அவ்வாறு தம் திறமையைக் காட்ட அவர்கள் முயன்றனர். அருஞ்சொற்களை மிகுதியாகக் கையாளாமலே உயர்ந்த இலக்கியத்தைப் படைத்தல், பெரும் புலவர்க்கே இயலும். இராமலிங்க வள்ளலாரின் பாட்டுகளும் பாரதியாரின் பாட்டுகளும இக்காலத்துச் சில உரைநடை இலக்கியங்களும் அவ்வாறு எளிய சொற்களைக் கொண்டே உயர்ந்த கலைப் படைப்புகளாக விளங்குதல் காணலாம். நடைவகைகள் ஓர் ஆசிரியரின் நடையைக் கடுமையான நடை என்கிறோம்; இன்னொருவருடையதை எளிய நடை என்கிறோம். ஒன்றை விளக்கமான நடை என்கிறோம்; மற்றொன்றைக் குழப்பமானது என்கிறோம்; இனிமையான நடை என்கிறோம்; அமைதியான
|