பக்கம் எண் :

1. நோயும் மருந்தும்1

1. நோயும் மருந்தும்

இயற்கை ஆற்றல் மிகுந்தது, ஆண் பெண் இரு பாலாரிடையே
இயற்கை படைத்துள்ள கவர்ச்சி பெரியது, அந்த நேரத்துக்
கவர்ச்சிக்கு எளிதில் இரையாகின்றன விலங்குகளும் பறவைகளும்.
மக்களிலும் அவ்வாறு எளிதில் இரையாகிறவர்கள் உண்டு; அவர்கள்
விலங்குகள் போன்றவர்களே, அவர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகி
வருந்த நேரிடும், அந்நேரத்துக்கு அப்பால், எதிர்கால வாழ்க்கையை
எண்ணிப் பார்த்து, வாழ்நாள் துணையாக வல்ல காதலுடையவரைத்
தேடுவதே உயர்ந்த மனிதப் பண்பு, அப்பண்பு உடையவர்களே காமக்
கவர்ச்சியைக் காதல் வாழ்வாக உயர்த்திக் கொள்ள வல்லவர்கள்.
அவர்களே இயற்கை படைத்த கவர்ச்சியையும் திட்டமிட்டுப்
பயன்படுத்தி வாழ வல்ல காதலர்கள்.

அத்தகைய நெறியான காதலர்களாலும் இயற்கை படைத்த
கவர்ச்சியை வென்றுவிட இயலாது. அதை உணர்ந்து பயன்படுத்தி
உய்ய அவர்களால் முடியும். ஆனால், கவர்ச்சி ஆற்றல் மிகுந்ததாய்த்
தோன்றும் அந்நேரத்தில் அவர்கள் காதலின் பெருமையையும் தம்
சிறுபான்மையையும் எண்ணித் திகைப்படைவது உண்டு.

காதலன் பெரிய வீரன்; பல போர்க்களங்களைக் கண்டவன்;
வெற்றிபல பெற்றவன், பகைவர்கள் அஞ்சும் படியான வீரச் செயல்
புரிந்தவன். அப்படிப் பட்டவன் காதலியைக் கண்டு ஒத்த அன்பையும்
உணர்ந்து தன்