இப்படிப் பார்க்கிறீ்ர்? யாரை மனத்தில் நினைத்துக்கொண்டு என்னோடு ஒப்பிட்டு இப்படிப் பார்க்கிறீ்ர்?" என்றாள் ஊடல் கொண்ட தலைவி. நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யார்உள்ள நோக்கினீர் என்று. (குறள், 1320) ஆண்மையும் பெருமிதமும் உடைய காதலன் ஊடலில் தோற்றுப் போகலாம். அதில் குறை ஒன்றும் இல்லை. காதலர் இருவரும் அன்பால் ஒன்றுபட்டவர்கள்; ஓருயிர் போல் ஆனவர்கள்; ஒருவர் வெற்றி மற்றவரின் வெற்றியாகவும் ஒருவர் தோல்வி மற்றவரின் தோல்வியாகவும் ஒருவர் இன்பதுன்பம் மற்றவரின் இன்பதுன்பமாகவும் உணரச் செய்வது உண்மையான காதல் ஆகையால் காதலர் இருவர்க்கிடையே போட்டி பொறாமை உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை; தன்னலத்திற்கும் மான உணர்ச்சிக்கும் இடம் இல்லை. ஆதலால் ஊடலில் தோல்வி என்பது இல்லை. தோல்விபோல் தோன்றுவதே வெற்றியாகிறது. ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த வெற்றியின் பயனை அன்பான உறவில் காணலாம். ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும் கூடலில் காணப் படும். (குறள், 1327) ஆதலின் காதலின் தன்மையே தனிச் சிறப்புடையது. மலரைவிட மென்மையானது. ஒரு சிலரே அதன் பயனைப் பெறும் தகுதியுள்ளவர் என்றார் திருவள்ளுவர். மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார். (குறள், 1289) |