னான் காதலன், "மற்ற எல்லோரையும் விட உன்மேல்தான் எனக்குக் காதல் உண்டு" என்றான். உடனே காதலி, அந்தச் சொற்களிலும் ஒரு குற்றம் கண்டு, "ஓ ஓ! இன்னும் பலரிடத்தில் உமக்குக் காதல் உண்டா? அவர்கள் எல்லோரையும் விட என்மேல் காதலா? யார் யாரைவிட என்மேல் காதல்? அவர்கள் யார்" என்று ஊடினாளாம். யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. (குறள், 1314) "இந்தப் பிறப்பில் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்" என்றான் காதலன். "அப்படியானால் அடுத்த பிறப்பில் என்னை விட்டுப் பிரியத் துணிந்துவிட்டீரா?" என்று காதலி கண்ணீர் மல்க அழுதாளாம். இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீ்ர்கொண் டனள். (குறள், 1315) "வெளியூர்க்குச் சென்றிருந்த போது உன்னை நினைத்துக்கொண்டிருந்தேன்" என்றான் அவன், உடனே அவள், "மறந்தால்தான் நினைக்க முடியும். அப்படியானால் என்னைப் பிரிந்தபோது அடிக்கடி மறந்துவிட்டு நினைத்தீரோ? அப்படி ஏன் மறந்தீர்" என்று ஊடினாள். உள்ளினேன் என்றேன்மற்று என்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். (குறள், 1316) என்ன பேசினாலும் வம்பாக விளைவதை உணர்ந்த காதலன், அவளோடு எதையும் பேச அஞ்சினான். பேசாமல் அவளை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான். "ஏன் |