பிணங்கி யிருந்ததை மறந்து வாய்திறந்து வாழ்த்திவிட்டது பற்றி வருந்தினாள். அவ்வாறு வாழ்த்தும்படி செய்வதற்காகவே வேண்டுமென்றே தும்மினான் என உணர்ந்து வருந்தினாள். மறுபடியும் ஊடல் கொள்ள ஒரு வழி செய்தாள். "யாராவது உம்மை நினைத்தால்தான் தும்மல் வரும், உரிமை மனைவி யான் இங்கே இருக்க, வேறு எவளோ ஒருத்தி உம்மை நினைத்திருக்கிறாள். அதனால்தான் தும்மினீர். யார் நினைக்கத் தும்மினீர்? யார் அது?" என்று அழத் தொடங்கினாள். ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை நீடுவாழ்க என்பாக்கு அறிந்து. (குறள், 1312) வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யார்உள்ளித் தும்மினீர் என்று. (குறள், 1317) காதலனுக்கு மற்றொரு தும்மல் வந்தது. மறுபடியும் அழுது ஊடல் கொள்வாளே என்று அஞ்சி அவன் அப்போது அந்தத் தும்மலை அடக்கிக்கொண்டான். அவ்வாறு அவன் பாடுபட்டுத் தும்மலை அடக்கியதைக் கண்டாள் காதலி, "உமக்கு வேண்டியவர்கள் உம்மை நினைக்கிறார்கள். அதை எமக்குத் தெரியாமல் மறைக்க வேண்டும் என்று தான் தும்மலை அடக்குகிறீ்ர்கள்" என்று சினம் கொண்டு அழுதாளாம். தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. (குறள், 1318) இவ்வாறு ஊடும் காதலியின் மனத்தில் அந்த ஐயமே ஏற்படாமல் உறுதிமொழி அளிக்கவேண்டும் என்று விரும்பி |