பக்கம் எண் :

18. ஊடல் உரிமை99

தவறு இல்லாதபோதும் வேண்டுமென்றே தவறு கற்பனை செய்து
ஊடுவதாகத் திருவள்ளுவர் அமைத்துள்ளபடியால் இந்த ஊடலில்
விளையாட்டுத் தன்மை உள்ளது. "பெண்கள் எல்லாரும் உன்னைக்
கண்ணால் பார்த்து மகிழ்கிறார்கள். ஆகையால், நீ பரத்தன், உன்
மார்பை அணுக மாட்டேன்" என்கிறாள் காதலி. பலரும் பார்வையால்
நுகர்வதாலேயே, காதலனுடைய கற்புத் தன்மை கெட்டு விட்டதாம்;
அதனால் பரத்தன் ஆகிவிட்டானாம்.

பரத்தையின் தொடர்பால்தான் காதலனுடைய வாழ்வில் குறை
ஏற்படும். அதன் காரணமாகவே, காதலி ஊடல் கொள்வது வழக்கம்.
ஆனால் இங்கே திருவள்ளுவர் படைத்த காதலனுடைய வாழ்வில்
எந்தப் பரத்தையும் குறுக்கிடவில்லை. பரத்தைத் தன்மை அவனுக்கே
சுமத்தப்படுகிறது. ‘பரத்த’ என்று அவனே விளிக்கப்படுதல் காணலாம்.

பெண்ணியலார் எல்லாரும்
கண்ணின் பொதுஉண்பர்

நண்ணேன் பரத்தநின் மார்பு. (குறள், 1311)

இந்தச் சொற்களில் கடுமை இருப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால்,
வழக்கத்திற்கு மாறான குற்றச்சாட்டு -- காதலனுக்குச் சிறிதும்
பொருந்தாதகுற்றச்சாட்டு -- இருப்பதால், விளையாட்டாக அமைகிறது.
அந்த விளையாட்டு, அடுத்த காட்சிகளில் தெளிவாகிறது.

காதலி ஊடல்கொண்டு ஒதுங்கியிருந்தபோது காதலனுக்குத் தும்மல்
வந்தது. ஒருவர்க்குத் தும்மல் வந்தபோது, நூறாண்டு வாழ்க என
மற்றவர்கள் வாழ்த்துவது தமிழர் வழக்கம். அதன்படி காதலன்
தும்மியதைக்கேட்ட காதலி தன்னை மறந்து "நூறாயுசு" என்றாள்,
உடனே தன் தவறு உணர்ந்தாள், அவனோடு பேசாமல் ஒதுங்கிப்