பக்கம் எண் :

44குறள் காட்டும் காதலர்

உண்டு.துன்பமும் உண்டு. காதல் இன்பம் கடல் போன்றது என்று
யாரோ சொன்னது நினைவுக்கு வருகின்றது. ஆமாம்; காதலின்
இன்பம் எல்லையற்றதுதான். அதன் இன்பம் கடல் போன்றது
என்பதை யாரும் மறக்க முடியாது. ஆனால், அந்தக் காதலே
துன்பமும் தருகிறது. துன்பம் தரும்போது, அந்தத் துன்பம்
கடலைவிடப் பெரியதாக உள்ளதே என வருந்துகிறாள்.

இன்பம் கடல்மற்றுக்
காமம் அஃதுஅடுங்கால்

துன்பம் அதனின் பெரிது (குறள், 1166)

இத்தகைய துன்பம் பகலில் உள்ளதைவிட இரவில் மிகக்
கடுமையாக உள்ளது. பகலில் கடல் போன்றது என்றால், இரவில்
வேகமான வெள்ளமாக உள்ளது எனலாம். கடலையேனும்
நீந்தமுயலலாம். நீந்திக் கரை காணவும் முடியும். கடுமையான
வெள்ளத்தில் சிக்குண்டால் என்ன செய்வது என்று நோகிறாள்.
பகலில் எல்லோரும் விழித்திருக்கிறார்கள்; என்னென்னவோ தொழில்
செய்கிறார்கள்; பற்பல பேசுகிறார்கள்; உலகம் பரபரப்பாக இருக்கிறது.
அதனால் துன்புற்று வருந்தும் மனம் இடையிடையே ஆறுதல் பெற்று
மாறியமைகிறது. பகலில் துன்பம் ஒரு நிலையாக இருப்பதில்லை.
அதனால் அவ்வளவாக உணரப்படுவதில்லை. இராக் காலத்தில்,
அதிலும் நள்ளிரவில் எல்லோரும் அமைதியாக உறங்கும் நேரத்தில்
உலகம் அமைதியாக அடங்கிக்கிடக்கும்பொழுது துன்பப்படுகிறவர்
தனியாகத் துன்பப்பட்டு வருந்த வேண்டியுள்ளது. உறக்கமும்
வருவதில்லை; பேச்சுத் துணையும் வாய்ப்பதில்லை. இதையும்
அதையும் கண்டும், கேட்டும் மனம் மாறுவதற்கும் வழி இல்லை.
ஆகவே நள்ளிரவில் தனித்திருந்து துன்புறும் தலைவியின் நிலைமை
கொடியதாக இருக்கிறது. "காதலாகிய கடுமையான வெள்