8. தனிமைத் துன்பம் மிக உயர்ந்தது என்று ஒன்றை நினைக்கும் போது மலை நினைவுக்கு வருதல் இயற்கை. எல்லை காண முடியாமல் உள்ள ஒன்றை நினைக்கும்போது கடல் நினைவுக்கு வரும். காதலனைப் பிரிந்த காதலியின் துன்ப உணர்ச்சி எல்லையற்ற ஒன்றாக உள்ளது. இத்தகைய காதல் துன்பம் அவளுக்கு ஒரு கடலாகவே உள்ளது. இந்தத் துன்பக்கடலையும் எளிதில் கடந்து செல்ல முடியும் என்னும் நம்பிக்கை அவளுக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு தோணி வேண்டும்; பாதுகாவலான தோணி வேண்டும். காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும் ஏமப் புணைமன்னும் இல். (குறள், 1164) காதல் துன்பத்தைக் கடப்பதற்கு உதவும் தோணி எது? காதலனுடைய அன்புதான். அந்த அன்பு வாய்த்தால், காதல் துன்பக் கடலாகவே தோன்றுவதில்லை என்பதை உணர்கிறாள். காதலால் துன்பம் நேரும்போது இவ்வாறு வருந்தும் தலைவிக்குப் பழைய நினைவு வருகிறது. காதலில் இன்பமும் |