யும் இருமுனைகளில் தன் மெலிந்த உயிர் தாங்கி வருந்தும் நிலைமை இரண்டு பக்கமும் இரு வேறு சுமைதாங்கி வருந்தும் கொம்பு (கா) போன்றது என்று உணர்கிறாள். "ஆனால் தெருவில் காவடியைச் சுமந்து செல்பவனுடைய உடல் வலிமையானது; அவனுடைய தோள் அவற்றைத் தாங்க முடிகிறது. என் உடம்பு மெலிந்தது; துன்பத்தைத் தாங்க முடியாததாக உள்ளது. இவ்வாறு காதலும் நாணமும்வருத்த, என் உயிரும் உடம்பும் வருத்துகின்றனவே" என்கிறாள். காமமும் நாணமும் உயிர்காவாத் தூங்கும்என் நோனா உடம்பி னகத்து. (குறள், 1163) |