பக்கம் எண் :

58குறள் காட்டும் காதலர்

காத்துவந்தது. அது என்ன நம்பிக்கை? அவர் வருவார் என்று
வருகையை விரும்பிய நம்பிக்கைதான் உயிரைக் காப்பாற்றியது. அவர்
வருவார் என்று வழியைப் பார்த்துப் பார்த்துக் கண்களும் ஒளி
மழுங்கின. சுவரில் நாட்களைக் கணக்கிட்டு விரலால் தொட்டு எண்ணி
எண்ணிக் கைவிரலும் தேய்ந்துவிட்டன.

ஒருநாள் எழுநாள்போல்
செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. (குறள், 1269)

உரண்நசைஇ உள்ளம்
துணையாகச் சென்றார்

வரல்நசைஇ இன்னும் உளேன். (குறள், 1263)

வாளற்றுப் புற்கென்ற
கண்ணும் அவர்சென்ற

நாள்ஒற்றித் தேய்ந்த விரல். (குறள், 1261)