பக்கம் எண் :

11. கனவின் உதவி59

11. கனவின் உதவி

காதல், இளைஞர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்
உணர்ச்சி. பரபரப்பான கடமைகள் மிகுந்த சூழ்நிலையில் வாழ்வோராக
இருந்தாலும், காதலரின் நெஞ்சம் தம் துணையை நினைந்து நினைந்து
ஏங்குவது இயற்கை. அமைதியும் ஓய்வும் மிகுந்த சூழ்நிலையில்
வாழ்வோரின் நெஞ்சம் அவர்களைவிட மிகுதியாக வருந்தும்; வேறு
கடமை இல்லாமையால் பிரிந்த துணையை நினைந்து ஏங்குவதையே
அவர்கள் வாழ்வாகக் கொள்வார்கள்.

மனம் எதை மிகுதியாக நினைந்து ஏங்குகிறதோ, அது கனவிலும்
வந்து அமையும். பகலெல்லாம் அதையே எண்ணி எண்ணி ஏங்கிய
பிறகு, இரவில் ஓய்ந்து உறங்கும் மூளையில் அந்த எண்ணமே
மேலெழுந்து நிற்கும். இவ்வாறு மூளையில் மேலெழும் எண்ணமே
கனவு எனப்படுவது.

காதலி தன் துணையை நினைந்து ஏங்கியபடியே பகற் பொழுதைக்
கழிக்கிறாள். காதலர் எங்கே இருக்கிறாரோ, என்ன செய்கிறாரோ,
எப்போது திரும்புவாரோ, அவரைப் பற்றிய செய்தி ஒன்றுமே
தெரியவில்லையே. அவர் யாரிடமேனும் செய்தி சொல்லி அனுப்பக்
கூடாதோ என்று பற்பலவாறு எண்ணி எண்ணி ஏங்குகிறாள்.
இவ்வாறான